அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக சசிகலா தேர்வானதை யடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர் செல்வம், அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதனால், பன்னீர் செல்வம் அணி, சசிகலா அணி என இரு தரப்பாக அதிமுக பிளவு கண்டுள்ளது. இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளதால், சசிகலா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப் பட்டார். எனினும், தனது அறப்போர் தொடரும் என பன்னீர் செல்வம் அறிவித் துள்ளார்.
இந்நிலையில், மனமுடைந்த பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவர் திடீரென தீக்குளித்தார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் அவரை, பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.