பன்னீருக்கு மீண்டும் முதல்வராக ஒரு வாய்ப்பு !

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது.
பன்னீருக்கு மீண்டும் முதல்வராக ஒரு வாய்ப்பு !
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அவர்களை விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பை ஒரு வாரத்தில் வழங்க வுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித் துள்ளது.

தற்போது, வரும் 9 ஆம் தேதி முதல்வர் பதவி ஏற்க தயாராகி வரும் சசிகலாவுக்கு இந்த வழக்கின் தீர்ப்பு எதிராக வந்தால் அவரால் முதல்வாராக நீடிக்க முடியாது.
அப்படி இல்லை, வழக்கு தீர்ப்பு பிறகு பதவியேற்பு நடைபெறும் என்று அறிவித்தால், சசிகலாவால், ஒரு நாள் கூட முதல்வராக இருக்க முடியாது.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் பெறுப்பேற்க பன்னீர்செல்வம் தயாராக வாய்ப்புகள் அதிகம் என்பது தான்.
Tags:
Privacy and cookie settings