சட்ட சபையில் எடப்பாடியால் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாது. ஓ.பி.எஸ் ஆதரவு மனநிலையில் 50 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கூடவே வடக்கிருந்து வந்த ஒற்றைச் சொல் நம்பிக்கை வாக்குறுதி.
சசிகலாவுடன் மோதல் போக்கு தொடங்கிய நாட்களில் இருந்தே தனக்கான அணியை வலுவாக்கிக் கொண்டார் பன்னீர் செல்வம்.
இதை அறிந்துதான் கூவத்தூர் விடுதியில் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ க்களுக்கு தனி வகுப்பு எடுத்தார் சசிகலா.
அவர்கள் தரப்பில் கொடுத்த வாக்குறுதி களையும் தாண்டி, பன்னீருக்குத் தான் வாக்களிப்பார்கள் என விவரித்த ஓ.பி.எஸ் அணியின் நிர்வாகி ஒருவர்,
தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மைத்ரேயன் கொடுத்த புகார் மிக முக்கியமானது. கட்சி சட்ட விதிகளின்படி சசிகலா தேர்வு செய்யப்பட வில்லை.
இதையொட்டி ஆணையத்தில் சசிகலா புஷ்பா கொடுத்த புகாரின் அடிப்படையில், சசிகலாவிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது.
இன்று அளிக்கப்பட்ட புகாரில், ‘அ.தி.மு.கவின் சட்ட விதிகளில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது.
அந்த வகையில், அவரால் நியமனம் செய்யப்பட்ட வர்களின் பதவியும் செல்லாது. கூவத்தூர் சொகுசு விடுதியில், சசிகலா கூட்டிய கூட்டங்களும் செல்லாது. அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமனமே செல்லாது.
அப்படிப் பார்த்தால், சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய முடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.
தற்போதும் அவைத் தலைவர் என்ற முறையில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதியை மதுசூதனன் அறிவிப்பதற்கு உரிமை உள்ளது.
இப்படி டெல்லியில் அமர்ந்து பல விஷயங்களில் லாபி செய்து, மீண்டும் ஆட்சி அமைக்கவும் நம்பிக்கை பெற்று வந்துள்ளார் மைத்ரேயன்.
கட்சி அதிகாரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் முழுதாகக் கைப்பற்றுவோம்.
அடுத்து வரக் கூடிய நாட்களில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை சசிகலா தரப்பினர் எதிர்கொள்ள இருக்கின்றனர்” என்றார் விரிவாக.
தவிர எடப்பாடி தரப்பில் இருந்து ஏழு எம்.எல்.ஏக்களைக் கொண்டு வந்துவிட்டாலே அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.
இந்த விவகாரத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது. ‘எங்கு பெரும்பான்மை உள்ளதோ, அந்தப் பக்கம் எங்கள் ஆதரவு இருக்கும்.
எம்.எல்.ஏ பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில் உள்ளனர். வரக் கூடிய நாட்களில் எம்.எல்.ஏக்களைத் தக்க வைப்பதே பழனிச்சாமிக்கு பெரும்பாடாக இருக்கும்.
சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் நாளுக்காக காத்திரு க்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.