அதிமுக எம்.எல்.ஏ க்கள் தொகுதி களுக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்டு விட்டு வந்து ஓட்டு போட அவகாசம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்ட சபையில் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஓ.பி.எஸ் பேசுகையில்,
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப் பட்டதை மக்கள் அறிந்து வைத்து ள்ளனர். எனவே அவர்களை உடனடியாக வாக்களிக்க அனுமதிக்க கூடாது. மக்களின் குரல் பேரவையில் எதிரொலிக்க வேண்டும்.
எனவே அதிமுக எம்.எல்.ஏ க்கள் அவரவர் தொகுதி களுக்கு சென்று மக்களிடம் கருத்துக் களை கேட்க வேண்டும். மக்களிடம் கருத்துக் களை கேட்ட பிறகு மற்றொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்.
இவ்வாறு ஓபிஎஸ் பேசினார். அப்போது சசிகலா தரப்பு எம்.எல்.ஏ க்கள் அவரது பேச்சுக்கு இடையூறு செய்து கோஷ மிட்டனர். பன்னீர் செல்வம் கோரிக் கையை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்து விட்டார்.