கொல்லைப் புறமாக ஆட்சியைக் கைப்பற்ற திமுக நினைக்க வில்லை. மக்களைச் சந்தித்து அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கவே திமுக விரும்புகிறது என்று ஸ்டாலின் பேசினார்.
சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் திமுக எம்எல்ஏ- க்கள் வலுக்கட்டாய மாக வெளியேற்றப் பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.
திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதான த்தில் நடைபெற்ற உண்ணா விரதத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவ ருமான மு.க.ஸ்டாலின் பேசியது:
''ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை முறையாக விசாரணை நடத்தினால், சசிகலா பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் அல்ல, ஆயுள் கைதியாக இருக்க வேண்டிய சூழல் வரும்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வ ராகவும், காபந்து முதல்வ ராகவும் இருந்தபோ தெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் கூற வில்லை.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்று 5 அரசாணை களில் கையெழுத் திட்ட எடப்பாடி பழனிசாமியும், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணை க்கு உத்தரவிட வில்லை.
இந்த புதிய ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய ஆட்சி அல்ல. இந்த ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும்.
திமுக ஆட்சி அமைந்தால் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தர விடப்படும். கொல்லைப் புறமாக ஆட்சியைக் கைப்பற்ற திமுக நினைக்க வில்லை.
மக்களைச் சந்தித்து அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கவே திமுக விரும்புகிறது'' என்று ஸ்டாலின் பேசினார்.