பெண்ணினத்துக்கே ஏற்பட்ட கொடுமை... நடிகர் சங்கம் !

நடிகை பாவனாவைக் கடத்தி, பலாத்காரம் செய்தது பெண்ணினத்துக்கே நேர்ந்த கொடுமை என்று நடிகர் சங்கம் கூறியுள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ​
பெண்ணினத்துக்கே ஏற்பட்ட கொடுமை... நடிகர் சங்கம் !
சமீப காலங்களில் பெண்கள் சம்மந்தப்பட்ட எல்லா துறை களிலும் கிராமம், நகரம் மற்றும் படித்தவர்கள், படிக்காதவர்கள் பேதமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்தேறி வருவது வேதனை யளிப்பதாக இருக்கிறது.

இது பற்றிய தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வெளிப் படுத்தி போராடி வருகின்றன. 

அதில் சம்மந்தப் பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர அரசுக்கும் காவல் துறைக்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்தும் வருகின்றன. 

இந்நேரத்தில் அனைத்து திரைத்துறை கலைஞர் களுக்கும் ஒரு வேண்டு கோளை வைக்கிறோம்! 

உங்களுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி பல நலத்திட்டங் களைச் செய்தும் வருகிறீர்கள். 
அத்துடன் பெண்களுக்கு சிறு குழந்தை களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை களுக்கு எதிராக குரல் கொடுப் பதையும், 

விழிப்புணர்வு ஏற்படுத்து வதையும் முன்னுரிமை கொடுத்து சமூக செயலாற்ற உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்! 

சமீபத்தில் செல்வி.பாவனா அவர்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஒரு நடிகை என்று மட்டும் பார்க்காமல் பெண் இனத்திற் கான ஒரு கொடுமை யாகவே கருதுகிறோம். 

இந்த நேரத்தில் எங்கள் உறுப்பினர் திரைக் கலைஞர் சகோதரி வரலட்சுமி அவர்கள் இது போன்று தனக்கேற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை மனக் கசப்புடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டி ருந்தார். 

அதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி யடைந்தோம். இதற்காக சட்டப் படியும் தார்மீகரீ தியாகவும் அவர்களுடன் இணைந்து குரல் கொடுக்க நாங்கள் முடிவெடுத்தி ருக்கிறோம். 

திரைத்துறையில் இயங்கி வரும் பெண்கள், நாடகத் துறையில் உள்ள பெண்கள், தொழில் பாதுகாப் பையும், உளவியல் ரீதியான பாதுகாப் பையும் காப்பாற்ற தனிப்பட்ட கவனம் செலுத்த 
தனிக் குழுக்கள் மற்றும் வழக்கறி ஞர்கள் ஆகியோரை நியமிப்பது குறித்து வருகின்ற செயற் குழுவில் விவாதித்து முடிவெடுக் கப்படும். 

இது போன்ற சமூக விழிப்புணர்வு க்கு போராடும் ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்திற்கும் எப்போதுமே எங்களுடைய ஆதரவு உண்டு. 

அவர்களுடன் சமூக மாற்றத் திற்கு இணைந்து செயல்பட நாங்கள் காத்திருக் கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings