சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற அதிகாரியிடம் மனு !

சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப் பாளரிடம் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற அதிகாரியிடம் மனு !
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் மத்திய சிறைச் சாலையான பரப்பன அக்ரஹாரா வில் அடைக்கப் பட்டுள்ளனர்.

அதிமுக வின் பொதுச் செயலாளர் என்ற பதவியில் சசிகலா இருப்பதால் தமிழக அரசு நடவடிக்கை களுக்கு தேவையான ஆலோசனை களை சிறையில் இருந்த படியே சசிகலா பிறப்பிக்க வேண்டி யுள்ளது. 

மேலும் கர்நாடக மாநில சிறை என்பதால் தனது விருப்பப்படி, விதிமுறை களை தளர்த்திக் கொண்டு இருக்க முடிய வில்லையாம். 
இந்நிலையில், தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப் பாளரிடம் சசிகலா மனு தாக்கல் செய்து ள்ளார் என தகவல் வெளியாகி யுள்ளது. 

சசிகலா மனு மீது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் கூறப் படுகிறது. 
இன்று பரப்பன அக்ரஹாரா சென்ற சசிகலாவின் அக்கா மகனும், அதிமுக துணை பொதுச் செயலாள ருமான டி.டி.வி. தினகரனிடம் இது குறித்து  அவர் ஆலோசனை நடத்தி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings