சபதத்தால் கதிகலங்கிய அமைச்சர்கள் !

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் சசிகலா எடுத்துக் கொண்ட சபதத்தால் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கதிகலங்கிப் போயுள்ளனர்.
சபதத்தால் கதிகலங்கிய அமைச்சர்கள் !
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.

சிறைக்கு செல்லும் முன்னர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வணங்கினார். அப்போது, மூன்று முறை சமாதியில் கையால் ஓங்கி அறைந்து, சபதம் எடுத்தார்.

இந்த நிகழ்வின் போது சசிகலாவுக்கு பின்னாலேயே நின்று பார்த்தவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திராவும் வளர்மதியும். 

இவர்களுக்கு சற்று தள்ளி நின்றவர் தலைமைக் கழக நிர்வாகியான மகாலிங்கம். 

இவர்கள் மூவருக்கு மட்டுமே சசிகலா எடுத்த சபதங்கள் குறித்து முழுமையாக தெரியும் என்பதால் அவர்கள் எங்கு போனாலும் சசிகலா சபதம் குறித்தே கேட்கின்றனராம்.
அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் பொது மக்களும் கட்சிக்கா ரர்களும் சசிகலா சபதம் குறித்து கேட்பதால் பல சமயங்களில் வளர்மதியும் கோகுல இந்திராவும் செல்போனை அணைத்து விடுவதாகவும் கூறப் படுகிறது. 

இவர்கள் தங்களுக்கு சபதம் குறித்து எதுவும் தெரியாது என்று கூறி வருவதால் அவர்கள் வாயிலிருந்து வார்த்தைகளை பெற நினைக்கும் பொது மக்கள் 

இப்படித் தானே சசிகலா சபதம் எடுத்தார் என சம்பந்த மில்லாமல் பலவற்றையும் கூறி அவர்கள் வாயால் சபதங்களை அறிய முயல்கின் றனராம்.
அவர்கள் சொல்லும் தகவலுக்கு ஆமாம் என்று கூறி அது மறு முனையில் பதிவு செய்யப்பட்டு சமூக வலை தளங்களில் வெளியானாலோ 

கட்சித் தலைமையாக இருக்கும் டி.டி.வி. தினகரனுக்கு தெரிய வந்தாலோ கட்சியில் தங்களுக்கு சிக்கல் ஏற்படலாம்  என அஞ்சி நடுங்குகின்றனர். 

இதனால் தற்போது எந்த அழைப்பு வந்தாலும், அவர்கள் நடுங்கு வதாகக் கூறப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings