அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு சிறிய காபிக் கடையில் ஒரு காபி இந்திய மதிப்பில் 1100 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. இது உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் மிக அதிக விலையாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் உள்ள ஆல்பா டொமிஞ் என்னும் காபிக் கடையில் அங்கேயே காபிக் கொட்டையை வறுத்து அரைத்து வெந்நீருடன் கலந்து சுடச்சுடக் காபி பானம் தயாரித்துக் கொடுக்கின்றனர்.
இந்தக் கடைக்கு வரும் வாடிக்கை யாளர்கள் மின்னணுத் திரையில் கொடுக்கப் பட்டுள்ள மெனு அட்டையில் காபிக் கொட்டையை எந்த அளவு வறுக்க வேண்டும்?
எவ்வளவு பதத்தில் அரைக்க வேண்டும்? எவ்வளவு சர்க்கரை கலக்க வேண்டும் என்றெல்லாம் தேர்வு செய்து விட்டால் ஒரு கோப்பையில் சுடச்சுடக் காபி தயாரித்துக் கொடுக்கின்றனர்.
எத்தியோப்பியா, பனாமா ஆகிய நாடுகளில் விளையும் உயர்தரக் காபிக் கொட்டை களையே இந்தக் கடையில் பயன் படுத்துவதாக இந்தக் காபிக் கடையின் தலைவர் தாமஸ் பெரிஸ் தெரிவித் துள்ளார்.
இந்தக் கடையில் ஒரு கோப்பை காபி, குறைந்தது 3 டாலர் முதல் அதிகமாகப் பதினெட்டு டாலர் வரை விற்பனை செய்யப் படுகிறது.
இந்தக் காப்பியும் கடுங்காப்பிதான். ஒவ்வொரு வரும் அவரவர் நிதிதிலை மைக்குத் தகுந்தாற்போல் காபியைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
கடுங்காப்பி யுடன் சர்க்கரையோ, பாலோ கலந்து கொடுக்க வேண்டு மென்றால் அதற்கு இன்னும் கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறார தாமஸ் பெரிஸ்.