கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அதிரடி படை விரைவு !

சென்னை கூவத்தூரி லுள்ள ரிசார்ட் ஒன்றில், சசிகலா தரப்பினர் அதிமுக எம்எல்ஏக் களை சிறை வைத்து ள்ளதாகவும் அவர்களின் செல்போன் களை பிடுங்கி வைத்துக் கொண்டு,
கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அதிரடி படை விரைவு !
வெளியே விடாமல் மிரட்டி வருவதாகவும் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து, அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தர விட்டார். 

பின்னர், ஆளுநருடன் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில், சென்னை கூவத்தூர் ரிசார்ட்டுக்கு இன்று காலை 7 மணியளவில் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். 

இவர்களுடன் வட்டாட்சியர் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். இங்கு எம்எல்ஏக்கள் எப்படி உள்ளார்கள், இவர்களை மிரட்டுகின்றனரா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் அதிகாரிகள் குழு இங்கு ஆய்வு நடக்கிறது.
Tags:
Privacy and cookie settings