ரஜினி படத்திற்காக ஜெர்மனி... இங்கிலாந்து ஸ்டண்ட் இயக்குனர்கள் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 
ரஜினி படத்திற்காக  ஜெர்மனி... இங்கிலாந்து ஸ்டண்ட் இயக்குனர்கள் !

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் நிறைவு பெறும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றுக்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டில் இருந்து ஸ்டண்ட் இயக்குனர்கள் 

மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சென்னை வந்துள்ள தாக செய்திகள் வெளி வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரஜினியுடன் வெளிநாட்டு ஸ்டண்ட் நடிகர்கள் மோதும் காட்சிகள் படமாக்கப் படவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் எமிஜாக்சன் தனது கேரக்டர் குறித்த புதிய தகவல் ஒன்றை தெரிவித் துள்ளார். 

எந்திரன்' படத்தின் ஐஸ்வர்யா ராய் கேரக்டருக்கும் '2.0' படத்தின் தனது கேரக்டருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் அதிகளவு இருக்கும் என்றும் அவர் கூறி யுள்ளார்.


ஏ.ஆர். ரஹ்மான் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளி யாகலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings