இடுப்பு வலியை குறைக்கும் தண்டாசனா !

இந்த கால கட்டங்களில், ஒவ்வொரு பாகத்திற்கும் புதிது புதிதாக நோய்கள் வருகிறது. இதனால் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சிறப்பு மருத்துவர் தோன்றுகிறார்.
இடுப்பு வலியை குறைக்கும் தண்டாசனா !
எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் போதிய சத்து கொண்ட காய்களை சாப்பிடாததே. ஆனால் வந்த வலியை போக்க, உடனடியாக வலி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் என சாப்பிடுவது நல்லது அல்ல. 

சிறு சிறு பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு கண்டால் பல பெரிய நோய்களை தடுக்கலாம் என்பது சரி தானே. 

அன்றாட வேலைகளாலும்,. தசைகளில் உண்டாகும் பிடிப்புகளாலும், முதுவலி, கால்வலி கை வலி என வருவது சகஜம் தான்.

அதே போன்று கீழ் முதுகு, கீழ் இடுப்பு, அடிபாகம், தொடை ,கால் ஆகிய வற்றிலும் காரணம் தெரியாமல் வலி வரும். 

அதனை இடுப்பு கீல் வாயு என்று அழைப்பார்கள். இதற்கு என்ன செய்யலாம் . செய்வதற்கு மிக எளிதான இந்த யோகாவை செய்யலாம். 

தண்டாசனா : 
தண்டாசனா செய்வது எளிது. தண்ட என்றால் சமஸ்கிருதத்தில் குச்சி என்று பெயர். குச்சி போன்று மார்பு, முதுகை விறைப்பாக வைத்துக் கொள்வதால் இந்த யோகாவின் பெயர் பெற்றுள்ளது. 

இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

செய்முறை : 

தரையில் கால் நீட்டி அமருங்கள். முதுகை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மார்பை நிமிர்த்துங்கள். பாத விரல்கள் மேலே நோக்கி இருக்கும் படி செய்யுங்கள். 
இடுப்பு வலியை குறைக்கும் தண்டாசனா !
குதி கால்களுக்கு தரையில் அழுத்தம் தரவேண்டும். உள்ளங்கைகளை தரையில் ஊன்றி அழுத்தம் தர வேண்டும். இதனால் உடல் விறைப்பாக உயரும். கால்களை வளைக்காமல் நீட்ட வேண்டும். 

இப்போது மூச்சை இழுத்து விடுங்கள். பின்னர் சாதரண மூச்சில் அரை நிமிடம் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வாருங்கள்.

பலன்கள் : 

முதுகுத் தசைகள் பலம் பெறும். அடி வயிற்றிற்கு சக்தி கிடைக்கும். ஒரு முகப்படுத்துதல் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். ஆஸ்த்மா கட்டுக்குள் வரும். 

குறிப்பு : 

கீழ் இடுப்பில் அடிபட்டவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.
Tags:
Privacy and cookie settings