நெதர்லாந்தில் அகதி இல்லமாக மாறிய சிறை !

நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லாததால் கைதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறைசாலை அகதி இல்லமாக மாற்றப் பட்டுள்ளது. 
நெதர்லாந்தில்
பெல்ஜியம், இங்கிலாந்து, கெய்தி, இத்தாலி, அமெரிக்கா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர்.

அங்கு வழக்கத்தை விட 2 மடங்கு அதிக கைதிகள் அடைக்கப் பட்டுள் ளனர். ஆனால் நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை.

ஏனெனில் அங்கு குற்றங்கள் நடை பெறாததால் கைதிகள் பற்றாக் குறை ஏற்பட் டுள்ளது. நெதர்லாந்தை பொறுத்த வரை 4-ல் 3 பங்கு சிறைகள் கைதிகள் இல்லாத தால் காலியாக வெறிச்சோடி கிடக்கிறது. 

இது கடந்த 20 ஆண்டுகளில் படிப் படியாக நிகழ்ந் துள்ளது. சிறைகள் காலியாக கிடப்பதால் அவை முன்னாள் கைதிகளின் மறுவாழ்வு இல்ல மாகவும், அகதிகள் இல்ல மாகவும் மாறி யுள்ளது. 

ஹர்லெம் சிறை அகதிகள் கால்பந்து விளையாடும் மைதான மாக்கப்பட் டுள்ளது. பெல்ஜியம், நார்வே ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

எனவே, அவர்கள் காலியாக உள்ள நெதர்லாந்து சிறைகளை வாடகைக்கு எடுத்து அவர்கள் அங்கு அடைக் கப்பட் டுள்ளனர். 

நெதர்லாந் தில் நார்ஜெர் ஹவன் சிறையை நார்வே 3 ஆண்டு களுக்கு குத்தகைக்கு எடுத் துள்ளது. 

அவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.250 கோடி வாடகை வழங்க ஒப்பந்தம் கையெ ழுத்தாகி யுள்ளது. அங்கு 242 கைதிகள் அனுப்பப்பட் டுள்ளனர். 

முன்னதாக பெல்ஜியம் 500 கைதிகளை நெதர்லாந்து சிறைக்கு அனுப்பி வைத் துள்ளது. 

கைதிகள் தொடர்ந்து குறைந்து வருவதால் நெதர்லாந்து சிறைகள் மூடப்பட்டு வருகின்றன. எனவே இன்னும் 4 ஆண்டு களில் 2600 சிறை காவலர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings