நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதால் வறட்சி ஏற்பட்டு விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிப்படைந்து வருவதால் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது.
இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங் களிலும் பொது மக்களுக்குச் சொந்தமான நிலங்கள்
மற்றும் காலி இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் முற்றிலுமாக பாதிக்கப் படுவதாக கூறப் படுகிறது.
இதனால், சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ள நிலத்தின் உரிமை யாளர்களே வரும் 21-ம் தேதிக்குள், முழுமையாக அந்த மரங்களை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது.
தவறும் பட்சத்தில் பட்டா நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை சட்டப்படி அகற்றி விட்டு, அதற்கான செலவுத் தொகை அபராதத்துடன் வசூல் செய்யப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.