ரித்திகா கொலையை கண்டித்து சிறுவர்கள் போராட்டம் !

3 வயது சிறுமி ரித்திகா பாலியல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து வட சென்னை பாலர் சங்கம் சார்பில் சிறுவர்கள் மவுன அஞ்சலி போராட்டம் நடத்தினர்.
ரித்திகா கொலையை கண்டித்து சிறுவர்கள் போராட்டம் !
100 க்கு மேற்பட்ட சிறுவர்கள் பேரணியாக சென்று எர்ணாவூரில் உள்ள ரித்திகாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். 

செல்லும் வழியில் பாலியல் குற்றங்களை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நேர்மையான விசாரனை நடத்தப்பட வேண்டும். 
சுனாமி குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மற்றும் பார்களை அகற்ற வேண்டும். எல்லா தெருக்களிலும் சசிசிடிவி கேமரா வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யுடன் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி சிறுமி ரித்திகா மற்றும் ஹாசினிக்கு சிறுவர்கள் அஞ்சலி செலுத்தனர்.
Tags:
Privacy and cookie settings