ஆர்.கே.நகர் தேர்தலில் புதுக்கட்சி... இளைஞர்கள் பட்டாளம் !

ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மதுரை அலங்கா நல்லூரில் தொடங்கிய போராட்டத்தை மேலும் வீரியப்படுத்த சென்னை மெரினாவில் ஐ.டி., இளைஞர்கள் ஒன்று கூடி பல்லாயிரக் கணக்கானோரை அறப் போராட்டத்தில் ஈடுபட வைத்தனர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் புதுக்கட்சி... இளைஞர்கள் பட்டாளம் !
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக போராட்ட த்தில் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளை மட்டு மல்லாது இவ்வுலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். 

உலக சாதனையாக கருதப்பட்ட இந்த அறப் போராட்டம் பெரும் வெற்றி யையும் தேடித் தந்தது.

இளைஞர்கள் பெற்றுத்தந்த இந்த சாதனை வெற்றியை, தமிழர்களின் மனதில் அளவில்லா நம்பிக்கையை அவர்கள் மீது ஏற்படுத்தி யுள்ளது. 

இவர்கள் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் லஞ்ச ஊழலற்ற ஓர் உலகத்தை உருவாக்கு வார்கள் என்றும் அப்போது குரல் கொடுத்து வந்தனர்.
ஜல்லிக்கட்டு மட்டு மல்லாமல், சென்னை எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கச்சா எண்ணை கசிந்து கடலில் கலந்ததால் பொது மக்களை பாதிக்காமல் இருக்க எண்ணை கழிவுகளை அகற்றும் பணியில் இளைஞர்களே முதலில் குதித்தனர். 

அது மட்டுமின்றி தற்போது நடந்துவரும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து முதலில் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களும் ஐ.டி., இளைஞர்களே.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராளிகள் ஒன்றிணைந்து, ‘‘என் தேசம் என் உரிமை’’ என்ற கட்சியின் பெயரையும், கட்சியின் கொடியையும் அறிமுகப் படுத்தினர். 

இதற்கான அறிவிப்பை தலைமை ஒருங்கிணை ப்பாளர் எபினேசர் நேற்று முன்தினம் ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், எங்களுடைய சக்தியை வெளிக் கொணரும் வகையில் நாங்கள் ஈடுபடுவோம் என தெரிவித் துள்ளது.

ஜல்லிக்கட்டு இளைஞர்களின் இந்த புதிய கட்சி தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், தமிழகம் மட்டு மல்லாமல் நம் நாட்டையே முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது உறுதியாகி விடும் என்பது தான் நிஜம்.
Tags:
Privacy and cookie settings