முதல்வர் பதவிக்கு அவசரம் காட்டியதன் பின்னணி?

ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நேரத்திலேயே, அடுத்த முதல்வர் யார்? என்ற விவாதங்கள் அரங்கேறத் தொடங்கி விட்டன.
முதல்வர் பதவிக்கு அவசரம் காட்டியதன் பின்னணி?
அப்போது, பன்னீர் செல்வத்தை முன்னிறுத்துங்கள். தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதை ஒப்புக் கொண்டார் சசிகலா.

ஆனால், கடந்த 60 நாட்களாக ஆட்சி அதிகாரத்தில், பன்னீர் செல்வம் பலம் பெற்று வருவதை சசிகலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பன்னீர் செல்வமே சொன்னது போல், வார்தா புயல் நிவாரண பணி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுடன் பேசி சென்னைக்கு குடிநீர், ஜல்லிக்கட்டு அவசர சட்டம் என பன்னீரின் புகழ் வேகமாகப் பரவ ஆரம்பித்தது.

டெல்லியில் பன்னீர் செல்வத்துக்கு கிடைத்த சிவப்புக் கம்பள வரவேற்பு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு கிடைத்த அவமரியாதை ஆகியவை கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு எரிச்சலை ஊட்டியது.
அதனால், பன்னீர் உங்களைத் தாண்டி சென்று விட்டார். சட்டசபையில் எதிர்க் கட்சிகளோடு நட்புறவில் இருக்கிறார். உடனே முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என சசிகலாவை அவர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

அதற்கு தகுந்தாற் போல், சட்டசபையில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ துரைமுருகன், ஐந்து ஆண்டுகளும் நீங்களே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என்றார்.

உங்கள் பின்னால் உள்ள சக்தியை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என பகிரங்கமாகப் பேசியதையும், எச்சரித்ததையும் அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சியோடு கவனித்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஒரு மாதமாகவே, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்களா?’ என எம்.எல்.ஏக்கள் பலரிடமும், ஓ.பி.எஸ் தரப்பு இஸ்லாமிய நண்பர்கள் சிலர் பேசியுள்ளனர்.
இதற்கு சில அமைச்சர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதைப் அவர்கள் சசிகலாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதை யெல்லாம் கண்டு அச்சமடைந்த காரணமாகவே, முதல்வர் பதவியை குறி வைத்து சசிகலா அவசர, அவசரமாகக் களமிறங்கியதாகக் கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings