இந்தியா 104 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவி இன்று சாதனை படைத்தது . இதற்கு முதல் ரஷ்யா கடந்த 2014 ம் ஆண்டில் 37 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தது .
இந்த முந்திய சாதனையை இந்தியா முறியடித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவு தளத்தில் இருந்து சரியாக காலை 9 .28 மணிக்கு பி ஸ் எல் வீ சி – 3 7 ரக ரொக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது
இந்த பி ஸ் எல் வீ சி – 3 7 ரக ரொக்கெட் மூலம் 104 செயற்கை கோள்களை ஏவி உலக சாதனை நிகழ்த்தி உள்ளது.
இந்தியா ,பி ஸ் எல் வீ சி – 3 7 ரக ராக்கெட்டின் மொத்த எடை 320 டன் ஆகும் ,உயரம் 44 .4 மீற்றர் உயரம் கொண்டது , இதில் இந்தியாவின் கார்டோ சாட் -2 ,ஐ என் எஸ் 1 -A ,ஐ என் எஸ் 1 -B என்ற மூன்று செயற்கை கோள்களும் இந்தியாவுக்கு சொந்த மானது.
இவை மூன்றும் இஸ்ரேல் ,கஜகஸ்தான் ,நெதர்லாந்து,சுவிஸ்லாந்து ,ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான 5 நனோ செயற்கை கோள்கள்
மற்றும் அமெரிக்காவின் 96 நனோ செயற்கை கோள்கள் என் மொத்தமாக 104 செயற்கை கோள்களை பி ஸ் எல் வீ சி – 37 ரக ரொக்கெட் விண்ணுக்கு சுமந்து சென்று இருக்கிறது.
ஒவ்வொரு செயற்கை கோள்களும் 5KG முதல் 10KG வரை எடை கொண்டவை ,இந்தியாவின் கார்டோ சாட் -2 செயற்கை கோள் 505 KM உயரத்தில் பூமியின் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப் படுகின்றது ,
இந்த செயற்கை கோள் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக பட எடுக்க உதவுகிறது, இந்த செயற்கை கோலானது இந்தியாவின் அனைத்து விதமான வரை படங்களை இலகுவாக கணிப்பிட உதவுகின்றது.
5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கை கோள் புவியியல் சார்ந்த அம்சங்களை துல்லியமாக கண்டறியும் திறன் படைத்தவை. இதன் மூலம் ரஸ்சியாவின் முந்தைய சாதனையை இந்தியா முறியடித்து இருக்கின்றது.