நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவ ருமான சரத்குமார், சசிகலாவுக்கு தன் முழுமையான ஆதரவை வழங்கினார்.
அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு
தோல்வியை தழுவிய திலிருந்து தீவிர அரசியலை விட்டு கொஞ்சமாய் ஒதுங்கி இருந்தார் சரத்குமார்.
ஜெயலலிதா மறைந்த பின், சசிகலா அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும் என்று சொல்லி யிருந்தவர் சரத்குமார்.
தன் மனைவி ராதிகாவுடன் சென்று சசிகலாவுக்கு சென்று சந்தித்து உரையாடினார். அவர் பொதுச்செயலாளர் ஆனதற்கு வாழ்த்து கடிதமும் அனுப்பினார்.
இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது;
தமிழகத்தின் பேரியக்கம், இந்திய அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக வின் தற்போதைய நிலை வேதனை யளிக்கிறது.
புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் கட்டிக்காத்த பேரியிக்கம் பிளவு படாமல் இருப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை எனது முந்தைய அறிக்கையில் பாராட்டி இருந்தேன்.
முக்கியமாக திரு பன்னீர்செல்வம் அவர்களே முன்மொழிந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தேன்.
தான் பொறுப்பேற்ற முதல் நாள் முதல் சிறப்பாக செயல்பட்ட திரு பன்னீர் செல்வம் அவர்கள் கட்டாயப் படுத்தப் பட்டேன் என்று கூறியிருப்பது மிகுந்த வருத்த மளிக்கிறது.
அவரின் உண்மைக்கும் உழைப்பிற்கு மதிப்பளித்து அவரின் எண்ணங் களுக்கு வழிவகுத்து, ஒன்று பட்டு புரட்சித் தலைவி மக்களுக்கு கொடுத்த வாக்குறு திகளை
மீண்டும் சிறப்பான முறையில் நிறை வேற்றுவ தற்கான அனைத்து செயல்களையும் உடனடியாக செய்ய வேண்டும்.