கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலா அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை போயஸ் கார்டனில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலா ஆலோசனை நடத்தினார். முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி சசிகலா
ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து நேற்று கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார்.
அதேபோல் முதல்வர் பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து பேசினார்.
ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. இதனால் சசிகலா கோஷ்டி பீதியடைந்துள்ளது.
இதனிடையே சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதே போல், தங்களை யாரும் அடைத்து வைக்க வில்லை என்றும் சுதந்திரமாகவே தாங்கள் உள்ளோம் என எம்.எல்.ஏ-க்கள் சிலர் பேட்டி கொடுத்தனர்.
இந்நிலையில், சென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், சசிகலா வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனையின் போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.