சவுதி அரேபியா இளவரசர் ‘துர்க்கி பின் சவுத் அல்-கபீர்’ என்பவருக்கு நேற்று ரியாதில் மரண தண்டனை நிறை வேற்றப்பட் டுள்ளது.
வாக்குவாதத்தில் ஈடுபடும் போது அல் கபீர் தனது நண்பர் Adel al-Mahemid ஐ சுட்டுக் கொலை செய்துள்ளார். அதற்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது மிகவும் அரிதாகும். சவுதியில் 1977-ம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பின ருக்கு இன்று மரண தண்டனை வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இது குறித்து சவுதி அதிகாரி கூறுகையில், நீதி என்பது அனைவருக்கும் சமம் , இதில் எந்த பாரபட்சமும் காட்டப்படாது. பாதிக்கப் பட்ட குடும்பத்தினர் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கும் இழப்பீட்டு தொகையை குற்றவாளியான இளவரசரிடமிருந்து வாங்க மறுத்து விட்டனர்,
அவருக்கு தண்டனை நிறை வேற்றப்பட வேண்டும் எனக் கூறினர். எனவே அல் கபீர் க்கு இன்று ரியாதில் மரண தண்டனையை நிறைவேற்றி யுள்ளோம் எனத் தெரிவித் துள்ளார்.
இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொரு வரும் , இது போன்ற நீதியும் தண்டனையும் நமது காட்டில் கிடைக்காதா என நிச்சயம் ஆதங்கப் படுவார்கள்.
குற்றவாளி அரசனாக இருந்து பாதிக்கப் பட்டவன் கடைக்கோடி மனிதாக இருந்தாலும், அரசனுக்கு உரிய தண்டன வழங்கப்படும் என்பதை நடைமுறை படுத்திய காட்டிய சவுதி அரசாங் கத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
இதை நாம் எளிதில் செய்தியாக படித்து விடலாம் ஆனால் இதை நடைமுறைபடுத்துவதற்கு எந்த மாறியான உறுதியும் நேர்மையும் தேவை என்பதை வார்த்தைகளால் எழுத முடியாது.
தந்தையான நீதிபதி தனது மகனுக்கு மரண தண்டனை கொடுப்பார் என்பதை நாம் கதைகளில் தான் படித்துள்ளோம்
குற்றவாளியை பிடித்தோமா தண்டனையை கொடுத்தோமா என்றிருந்தால் தானே குற்றங்கள் குறையும். விசாரனை, ஜாமின், விடுதலை, பாதுகாப்பு, அந்த கட்சிக்காரன் இந்த கட்சிக்காரன், அரசியல் வாதி தலையீடு, என்றிருந்தால் எப்படி குற்றங்கள் குறையும்
இந்த ஆண்டு மட்டும் 134 நபர்களுக்கு சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு முன் அரசனும் ஆண்டியும் ஒன்று என்பதை மீண்டும் ஒரு முறை சவுதி நிரூபித்துள்ளது