எங்க ஊரை காப்பாத்துங்க... சிறுவன் குரல் கொடுத்த !

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எங்க ஊரை காப்பாத்துங்க... சிறுவன் குரல் கொடுத்த !
போர்வெல் மூலம் துளையிட்டு பல ஆயிரம் அடிகளுக்கு கீழ் உள்ள ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுப்பதால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்று கூறப் படுகிறது.

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு புரட்சியில் ஈடுபட்ட இளைஞர் சமுதாயம் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித் துள்ளனர்.

இந்நிலையில், நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த சிறுவன் தரணி. கோவையில் கல்வி பயின்று வரும் தரணி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 

தங்களது கிராமத்தை காப்பாத்து மாறு வெளி யிட்டுள்ள வீடியோ தற்போது வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில், தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மாணவர்கள் மற்றும் இளைஞர் களுமாகிய அண்ணன் மார்கள் போராட்ட த்தில் ஈடுபட்டு வெற்றியை பெற்று தந்தனர்.

அதே போல தற்போது எங்கள் ஊரில் நடந்து கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம். இந்த திட்டம் 2007ல் எங்கள் ஊர் அருகே உள்ள கிராமத்தில் தான் முதலில் இந்த மீத்தேன் இருப்பதாக கூறினார்கள்.

ஆனால் இப்போது 2017ல் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

மேலும், அந்த சிறுவன் பிரதமர் மோடி ஐயா, உங்களுக்கு என்ன வேணுமோ அதை எடுத்து க்குங்க, ஆனால் எங்களுக்கு விவசாயம் பண்ண நிலம் வேணும். எங்க விவசாயத்தை அழிச்சிராதீங்க என்று வேண்டுகோள் விடுத்துள்ளான்.
இந்த திட்டத்தால் உடலில் கேன்சர் போன்ற நோய்கள் உருவாகும் என்றும் கூறுகிறார்கள். மேலும் விவசாயம் அழிந்து விடும். 

எல்லோரும் சாப்பிடும் போது உணவை மட்டுமே நினைத்து பார்க்கிறோம். ஆனால் அதை உருவாக்கும் விவசாயியை மறந்து விடுகிறோம் என்று தெரிவித் துள்ளான்.

தற்போது அந்த சிறுவனின் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Tags:
Privacy and cookie settings