திருவள்ளூர் அருகே கீழ் நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் ஹேமாவதி தம்பதிக்கு 5 வயதில் மன் உள்ளான். இந்த மகனுக்கு பிறவியிலேயே மூளை வளர்ச்சி குறைவு.
இந்த நிலையில் ஹேமாவதி மீண்டும் கர்ப்பமாகி யுள்ளார். இந்த குழந்தைக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது என தனியார் மருத்துவ மனையில் தொடர்ந்து 7 மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிசிக்சை அளித்த மருத்துவ மனை கரு நன்றாக உள்ளது எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறியுள்ளது. எனினும் சந்தேகப் பட்ட ஹேமாவதி வேறு ஒரு மருத்துவ மனையில் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.
அங்கே ஹேமாவதிக்கு பேரதிர்ச்சி காத்திருந் துள்ளது. கருவில் இரட்டை குழந்தை உள்ளது. இரண்டும் மூளை வளர்ச்சி குறைவாக உள்ளது என மருத்து வர்கள் கூறி யுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ஹேமாவதி , கருவுற்று 7 மாதம் ஆகிய நிலையில் ஒன்றும் செய்ய முடியாதே ஏற்கனவே ஒரு மன வளர்ச்சி குன்றிய குழந்தை உள்ளதே
தற்போது 3 மன வளர்ச்சி குன்றிய குழந்தையை வைத்து என்ன செய்வது என பதறிய ஹேமாவதி உறவினர் களுடன் சென்று தவறான சிசிக்சை அளித்த, பொய்யான தகவலை கொடுத்த தனியார் மருத்துவ மனையை முற்றுகை யிட்டார்.
உடனே சம்பவ இடத்திற்கு போலிசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தவறான சிகிச்சை அளித்த இந்த மருத்துவ மனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரித்தனர்.