பள்ளி, கல்லூரி, பல்கலையில் பயிலும் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை (ஸ்காலர் ஷிப்) பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அதன்படி அதிக மதிப் பெண் பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வழங்கப் படுகிறது. இத்திட்டத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2.05 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த உதவித் தொகையை பெற ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அவசியம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 15-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.