செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர் !

உத்தரகண்ட் மாநிலத்தில் செல்ஃபி எடுக்கும் போது 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் ஒருவர் பலியானார். 
செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர் !
கடந்த வாரம் கல்லூரி மாணவர்கள் சிலர் டேராடூனிலிருந்து முசோரிக்கு நண்பர்களுடன் பைக்கில் சுற்றுலா சென்றுள்ளனர். 

சுற்றுலா முடிந்த அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது கோலூகேட் அருகில் உள்ள ஒரு அழகான இடத்தில் தாங்கள் வந்த பைக்கை பார்க் செய்து விட்டு செல்ஃபி எடுக்க சென்றுள்ளனர்.

அப்போது 50 அடி பள்ளம் அருகில் உள்ள ஒரு அழகிய இடத்தை மையமாக வைத்து அவர்கள் செல்ஃபி எடுத்த போது, எதிர்பாராதவிதமாக ஒரு மாணவர் அந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டது. 
பின்னர் போலீசார் விசாரணை மேற் கொண்டதில் அவர் முனீர் அகமது என்றும், 
டேராடூனில் உள்ள ஒரு தனியார் பல்கலைக் கழகத்தில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
Tags:
Privacy and cookie settings