ஏழு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த முதியவர் !

1 minute read
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மட்ட வானி தெருகு பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சனேயலு (வயது 60). இவருக்கு இளம் வயதில் திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஏழு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த முதியவர் !
ஆஞ்சனேயலு மனைவியை சித்ரவதை செய்ததால் அவர் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். கூடவே 2 குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார்.
அதன் பிறகு ஆஞ்ச னேயலு தனக்கு 6 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறி ராவி பாடு, தோடூர், அமலா புரம், ராஜாபடமரா, சகம்தெரு ஆகிய 5 பெண்களை தனித்தனியாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்க்கை கசந்ததும் அவர்களை விரட்டி விட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்காய்கடம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை ஆஞ்சனேயலு 7-வதாக திருமணம் செய்தார்.
தனக்கு 6 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் தனது வயதான தாயாரை கவனிக்க வேண்டும் என்று ஏமாற்றியும் திருமணம் செய்தார்.
இந்த நிலையில் கர்ப்ப மான மனைவி லட்சுமியை பிரசவத்துக்காக ஆஞ்ச னேயலு தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு ஆஞ்சனேயலு மனைவி லட்சுமியை அழைத்து வரவில்லை.

இதனால் லட்சுமி விசாரித்த போது ஆஞ்சனேயலு ஏற்கனவே 6 முறை திருமணம் செய்த தாகவும் தான் 7-வது மனைவி என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து லட்சுமி குழந்தையுடன் ஆஞ்சனேயலு வீட்டுக்கு சென்றார். அப்போது ஆஞ்சனேயலு தலை மறை வாக இருந்தார். அவரது வயதான தாய், லட்சுமியை வீட்டுக்குள் விட மறுத்தார்.
இதனால் லட்சுமி சுயதொழில் குழு பெண் களின்உதவியை நாடினார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து லட்சுமி கணவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அதன் பிறகு மகளிர் சுயஉதவி குழுவினர் வீட்டு கதவை உடைத்து லட்சுமியையும், குழந்தையையும் வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
Tags:
Today | 21, March 2025
Privacy and cookie settings