சசி சொத்துக்கள் பறிமுதல்... உச்சநீதிமன்றம் நடவடிக்கை !

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய 4 பேருக்கும் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனை 10 கோடி அபராதம் விதித்து தீர்பளித்தார்.
சசி சொத்துக்கள் பறிமுதல்... உச்சநீதிமன்றம் நடவடிக்கை !
இந்த தீர்ப்பினை எதிர்த்து பெங்களூர் உயர் நீதிமன் றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதன் பிறகு நீதிபதி குமாரசாமி தனி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்து 4 பேரையும் விடுதலை செய்து உத்தர விட்டார்.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் இன்று சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறை தண்டனை உறுதி செய்து உத்தர விட்டது.
மேலும், சசிகலா மற்றும் இளவரசி, திவாகரன் ஆகிய 3 பேரும் முறை கேடாக பெற்ற சொத்துக் கள் அனைத்தை யும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings