ஜெ., சமாதிக்கு சென்று பன்னீருக்கு சாபம் விடும் விதமாக ஜெ.,சமாதியை ஒங்கி அடித்து சபதம் எடுத்த சசிகலா, அங்கிருந்து நேராக ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆர்., படத்தின் முன்பு சில நிமிடம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
பன்னீர் செல்வம் ஜெ.,சமாதியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டது போல தன்னையும் உறுதிப் படுத்திக் கொள்ள அவர் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அதில் உறுதித் தன்மை தெரிய வில்லை.
யாரையோ பலி வாங்கத் துடிக்கும் முக பாவனையே தெரிந்தது. பிறகு அங்கிருந்து வெளியே வந்து, கார் மூலம் பெங்களூரு பயணத்தை துவங்கினார் சசி. நான்காண்டு கால சிறை வாசத்தை நோக்கிய பயணம் தொடங்கியது.