அதிமுக அவைத் தலைவர் பதவியில் செங்கொட்டையனை சசிகலா உட்கார வைத்தாலும் அவரது குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.
சசிகலாவால் தான் ஓரம் கட்டப்பட்ட செங்கோட்டையன் இப்போது அவராலேயே பதவி கிடைக்கும் என நம்பிக் கொண்டிருக் கிறாரே என அவரது மனைவி புலம்பிக் கொண்டிருக் கிறாராம்.
ஜெயலலி தாவின் நம்பிக்கைக் குரிய தளபதிகளில் ஒருவராகத் தான் செங்கோட்டையன் இருந்து வந்தார்.
ஆனால் செங்கோட்டையனின் லீலைகளால் ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்து அவரை ஓரம் கட்டி வைத்தார்.
செங்கோட்டையன்
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து செங்கோட்டையன் அதிமுகவில் மீண்டும் தலையெடுத்தார். தமக்கு அமைச்சர் பதவி, கட்சிப் பதவி தரக் கோரி போர்க்கொடி தூக்கினார்.
அவைத் தலைவர்
இதனால் சசிகலா அணியில் முக்கிய தளபதிகளில் ஒருவரானார் செங்கோட்டையன்.
தற்போது அதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்து மதுசூதனனை இடைக்கால பொதுச்செயலர் சசிகலா நீக்கி விட்டு செங்கோட்டை யனை அப்பதவியில் அமர வைத்துள்ளார்.
தப்பி ஓட்டம்
செங்கோட்டையன் தான் கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கவும் காரணமாக இருந்தார்.
அதிகாரிகள் ரெய்டு வரப் போகிறார்கள் என்பதற்காக நேற்று முக்காடு போட்டு ரிசார்ட்டில் இருந்து தப்பி ஓடினார் செங்கோட்டையன்.
மனைவி புலம்பல்
இதனிடையே சசிகலாவையா நம்புவது? என் கணவருக்கு என்னமோ ஆகி விட்டது என செங்கோட்டையனின் மனைவி ஈஸ்வரி புலம்பி வருகிறாராம்.
இதே போல் செங்கோட்டையனும் தமது உறவினர்களிடம், தமக்கு அமைச்சர் பதவி கிடைக்காது போல.. எல்லாமும் வீணாகிவிட்டது என கூறியுள்ளாராம்.