சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதிப் படுத்தப்பட்டு விட்ட சசிகலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு மீண்டு வரவே முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா அடுத்து ஆறு வருடங்களையும் சேர்த்து மொத்தம் 10 வருடம் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
கட்சிப் பதவியில் மட்டுமே இருக்க முடியும். மற்ற படி அவருக் கான சட்ட நிவாரணம் என்பது சுத்தமாக இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
சட்டரீதியாக வாய்ப்பில்லை
சட்ட ரீதியாக அவருக்கு வாய்ப்புகள் கிட்டத் தட்ட இல்லை என்றே கூற வேண்டும். ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. அது மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது.
மறு பரீசலனை கோரலாம்
தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று கேட்கலாம். ஆனால் அதை உச்சநீதி மன்றம் பொதுவாக ஏற்க வாய்ப்பில்லை.
அதாவது 10ல் 9 வழக்குகளில் மறு ஆய்வுக்கு இடமில்லை என்று தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித் துள்ளது.
பெஞ்ச் விரும்பாது
தனது சொந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய எந்த பெஞ்ச்சுமே விரும்பாது. எனவே மறு ஆய்வு என்பது கால விரையம் தான்.
மிக மிக முக்கியமான பிரச்சினைகளின் போது மட்டுமே மறு ஆய்வு குறித்த யோசனைக்கே நீதிபதிகள் போவார்கள்.
10 வருடம் காலி!
ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அந்த வகைப் பாட்டுக்குள் வராதவ ர்கள் என்பதால் மறு ஆய்வுக்கான வாய்ப்பும் சுத்தமாக கிடையாது என்பதே நிதர்சனம்.