சசிகலாவுக்கு உணவு போன்லெஸ் மட்டன் !

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை உச்சநீதி மன்றம் உறுதி செய்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் நேற்று சிறையில் அடைக்கப் பட்டனர்.
சசிகலாவுக்கு உணவு போன்லெஸ் மட்டன் !
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள 3 பேரும் வாரத்தில் 2 நாட்கள் தங்களுக்கு அசைவ சாப்பாடு வேண்டும் என்று சிறை அதிகாரி களிடம் கோரிக்கை வைத்தனர். 

இந்த கோரிக்கையை சிறைத்துறை மறுத்து விட்டதாகக் கூறப் படுகிறது. 

இந்நிலையில், சிறை விதிமுறை களின்படி நாள் ஒன்றுக்கு, ஒரு கைதிக்கான சராசரி சாப்பாட்டு செலவு ரூ.75 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

வாரத்தில் ஒருநாள் எலும் பில்லாத மட்டன் கைதிகளுக்கு வழங்கப்படும். இதன் அளவு 115 கிராம். கூடுதலாக கொஞ்சம் சிக்கனும், முட்டையும் கொடுக்கப் படுகிறது.
இதன் அடிப்படையில், தற்போது சிறையில் உள்ள சசிகலாவு க்கும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே மட்டன் உள்ளிட்ட அசைவ சாப்பாடு கிடைக்கும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
Tags:
Privacy and cookie settings