ஓட்டு மொத்த தமிழகத்தையும் தன பக்கம் திருப்பி விட்டார். முதல்வர் பன்னீர் நான் தேனி மாவட்டக்காரன் மாடு, பால், விவசாயம், ஜல்லிக்கட்டு, போன்றவைகள் என் ரத்தத்தில் கலந்த ஒன்று.
நான் எப்படி மாணவர்களை காவல் துறையை விட்டு அடிப்பேன் என்று கடந்த வாரம் தனது நெருங்கிய நட்பு வட்டத்தில் குமுறினார் முதல்வர் பன்னீர். இதோ இப்போது மனம் திறந்து விட்டார்.
பொதுச்செயலாளராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா கூறினார். முதலில் என்னை முதலமைச்சராக பதவியேற்கச் சொன்னதை நான் ஏற்கவில்லை.
சசிகலாவை ஊருக்கு கூட்டிச் செல்ல விரும்புவதாக திவாகரன் கூறினார். கருத்து வேற்றுமையை தவிர்க்க முதலமைச்சர் பதவி ஏற்க சம்மதித்தேன்.
முதல்வரான 3 நாட்களுக்கு முன் சசிகலாவை பொதுச்செயலாளராக ஆக்க கூறினார்கள். சசிகலா பொதுச்செயலாளராக தேர்வான பின் என்னுடைய கடமையை சிறப்பாக செய்தேன்.
வர்தா சீரமைப்பு பணிகளை சிறப்பாக செய்தேன். ஜெயலலிதாவின் நற்பெயருக்காகவே நற்பணிகளைச் செய்தேன். நான் சிறப்பாக பணியாற்றியது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
குடிநீருக்காக கிருஷ்ணாநதி நீரை வரவழைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்.
அவ்வாறு சந்தித்து முடிவு கண்டதால் நல்ல பெயர் கிடைத்தது. மெரினா எழுச்சியின் போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.
ஜல்லிக் கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டேன். அதன் பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். என்னுடைய அமைச்சரவையில் உள்ளவரே அவ்வாறு பேட்டியளித்தது நீதியா அல்லது நியாயமா என்று தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் சசிகலாவிடம் தெரிவித்தேன். அவர் கண்டித்து விட்டேன் இனிமேல் அப்படி பேச மாட்டார் என்று தெரிவித்தார்.
உதயகுமார் பேச்சை கண்டித்த அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதே கருத்தை வலியுறுத்தி மதுரையில் பேட்டியளிக்கிறார்.
என்னை முதல்வராக வைத்துக் கொண்டு ஏன் அவமானப் படுத்த வேண்டும்? என்னுடைய மனநிலை மிகவும் பாதிக்கப் பட்டிருந்தது.
வீடியோ பார்க்க... !
கட்சியின் நிலையை கண்டு அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். என்னால் கட்சிக்கு பங்கம் ஏற்படக் கூடாது என்பதால் இதை யாரிடமும் சொல்லவில்லை.
ஆனால் இனி வேறு வலி இல்லை. நான் அம்மாவிற்காக ஓட்டுப் போட மக்களை, மாணவர்களை நம்புகிறேன். என்னை வழி நடத்துங்கள்.