கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா !

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். 
கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா !
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் களை குவித்த வழக்கு 21 ஆண்டு களாக நடந்து வந்தது. 

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. 

அதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்ற வாளிகள் என்றும் 4 ஆண்டுகள் தண்டனை பெற வேண்டும் என்பது உறுதியானது.

இதனை யடுத்து, ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், சசிகலாவும் இளவரசியும் இன்று பெங்களூரு நீதிமன்ற த்தில் சரண் அடைந் தார்கள். 

பின்னர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். 

சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்னர், உறவினர் களிடம் பேசுவதற்கு 15 நிமிடங்கள் இளவரசி க்கும் சசிகலா விற்கும் நேரம் வழங்கப் பட்டது. 

இதனைத் தொடர்ந்து, உறவினர் களுடன் பேசிக் கொண்டி ருந்த சசிகலா தன் கணவர் நடராஜனுடன் பல விஷயங் களை பேசிக் கொண்டி ருந்தார். 
அப்போது, சிறைக்கும் செல்லும் துக்கம் தாங்க முடியாமல் நடராஜனை கட்டிப் பிடித்து ஓ வென்று கதறி அழுதார் சசிகலா. 

பின்னர், அவரை நடராஜன் சமாதானம் செய்தார். தனக்கு வழங்கப் பட்ட 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா.
Tags:
Privacy and cookie settings