சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் விரும்ப வில்லை. இதனால், நாளை (செவ்வாய் கிழமை) நடைபெறுவதாக இருந்த பதவி ஏற்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.
அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வாகி உள்ள சசிகலா நாளை (செவ்வாய் கிழமை) தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சென்னை பல்கலை.,யில் நடைபெற இருந்த பதவியேற்பு விழா திடீரென ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
ஒத்தி வைப்புகான காரணம்:
சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சசிகலாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், டில்லியில் உள்ள அவர் சுப்ரீம் கோர்ட் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட சட்ட வல்லுநர்களுடன் வழக்கு தீர்ப்பு குறித்து ஆலோசித்தார். அதில், தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராகவே வரும்.
அவர் மீண்டும் சிறை செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிய வந்தது. இந்நிலையில், சசிகலா முதல்வரானால் தமிழகத்தில் ஸ்திரமான ஆட்சி நடை பெறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு
என கவர்னருக்கு தெரிய வந்தது. இதனால், நாளை(செவ்வாய் கிழமை) பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவர்னர் சம்மதிக்க வில்லை.
இதற்கிடையே, கவர்னர் வித்யாசாகர் ராவ் டில்லியிலிருந்து மும்பை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.