கர்நாடக சிறைத் துறை டி.ஜி.பி சத்திய நாராயணராவ் அளித்த பேட்டி வருமாறு:- சசிகலாவுக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு தான் வழங்கப்படுகிறது.
மற்ற கைதி களுக்கு எந்த நேரத்தில் உணவு வழங்கப் படுகிறதோ அதே நேரத்தில் தான் சசிகலா வுக்கும் உணவு வழங்கப் படுகிறது.
அவர் நன்றாக இருக்கிறார். மிகவும் அமைதியாக காணப் படுகிறார். இங்கு எல்லா கைதிகளும் குற்ற வாளிகள் தான். யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப் பட வில்லை.
தினமும் காலையில் புளிசாதம், உப்புமா, அவல்சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய வையும், மதியம் கேழ்வரகு களி, சோறு, சப்பாத்தி, இரவில் சப்பாத்தி, களி ஆகியவை வழங்கப் படுகின்றன.
வாரம் ஒருமுறை மட்டனும், சிக்கனும் வழங் கப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறை டீ, காபியும் வழங்கப் படுகிறது.
பெங்களூர் மத்திய சிறையை பொறுத்த வரை ‘ஏ’ கிளாஸ், ‘பி’ கிளாஸ் என எந்த வித்தி யாசமும் இல்லை. சசிகலாவு க்கு எந்த சிறப்பு அறையும் வழங்கப்பட வில்லை.
மற்ற கைதி களுக்கு வழங்கப் படுவதைப் போல சாதாரண அறையே ஒதுக்கப் பட்டுள்ளது. சசிகலா தரையில் தான் படுத்து தூங்குகிறார். குளிர் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 2 போர்வைகள் வழங்கப் பட்டுள்ளன.
கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக மற்ற கைதியுடன் தங்க வைக்கப் படுவார்கள். சசிகலா கேட்டுக் கொண்டதால் அவருடன் இளவரசி மட்டும் தங்கியுள்ளார்.
பெங்களூர் சிறையில் 200க்கும் குறைவான பெண் கைதிகளே இருக் கிறார்கள். பாதுகாப்புக்காக 3 பெண் கண்காணிப் பாளர்கள் இருக்கிறார்கள்.
ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவர்களிடம் தெரிவிக்கு மாறு சொல்லி இருக்கிறேன்.
மற்ற கைதிகள் மூலம் சசிகலாவுக்கு ஆபத்து என்ப தெல்லாம் தேவையற்ற அச்சம். குற்ற வழக்கில் தண்டனை பெற்றதாலே சசிகலா சிறையில் அடைக்கப் பட்டு இருக்கிறார்.
அவர் நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. எல்லோருக்கும் வழங்கப் படுவதை போலவே பாதுகாப்பு வழங்கப் படுகிறது.
கைதி விரும்பினால் ஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக் கப்படும். அதற்கு கோர்ட்டும் சம்பந்தப் பட்ட இரு மாநில அரசுகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
சசிகலா தேவைப் பட்டால் தன்னை எந்த சிறைக்கு வேண்டு மானாலும் மாற்ற கோரலாம். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவ தில்லை.
ஜெயிலில் சசிகலா எந்த வேலையும் செய்ய வில்லை. தேவைப் பட்டால் விரும்பும் வேலையை செய்யலாம். அதற்காக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.