முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்வது குறித்து சசிகலா தான் முடிவெடுக்க வேண்டும் என தம்பிதுரை எம்.பி தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்திய ஓ.பி.எஸ் தனது தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க நினைத்தார்.
ஆனால் மன்னார்குடி கோஷ்டி பல குளறுபடிகள் செய்து அவர் ஆசையை கலைத்தது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார்.
நேற்று செய்திளார்களிடம், பேசிய அதிமுகவை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் எம்.பி.தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது நிலையான ஆட்சி அமைந்துள்ளது.
அதிமுகவை உடைக்க ஓ.பி.எஸ் சதி செய்தார். ஆனால் அவர் பக்கம் 10 எம்.எல்.ஏக்கள் மட்டுமே நின்றதால் அது அவரால் முடியாமல் போனது.
ஓ.பி.எஸ்ஐ மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து சசிகலா தான் முடிவு செய்ய வேண்டும். அவர் முடிவை தான் நாங்கள் ஏற்று கொள்வோம் என்று கூறினார்.