சசிகலா மீது தாக்குதல் நடக்கலாம்... உளவுத்துறை !

நாடகத்தை அரங்கேற்றி, பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி விட்டு, தமிழக சிறைக்கு தன்னை மாற்றுமாறு சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்ட மிட்டுள்ளதாம்.
சசிகலா மீது தாக்குதல் நடக்கலாம்... உளவுத்துறை !
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அதிமுக பொதுச்செயலர் சசிகலா மீது தாக்குதல் நடைபெற வாய்ப்பு ள்ளதாக மத்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக் கையை தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் திடீர் மரணம், சசிகலா மீது கோபமாக மக்களிடம் வெளிப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, பெண்களிடம். இந்த சூழ்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறை யிலுள்ள தமிழ் பெண் கைதிகள் சிலர் சசிகலாவை தாக்கலாம் என அச்சம் நிலவுகிறது. 

அப்படி செய்யா விட்டாலும், சசிகலா தரப்பே திட்ட மிட்டு ஒரு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்ற வாய்ப் புள்ளதாம்.

இப்படி நாடகத்தை அரங்கேற்றி, பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி விட்டு, தமிழக சிறைக்கு தன்னை மாற்றுமாறு சசிகலா தரப்பு நீதிமன்ற த்தில் மனு தாக்கல் செய்ய திட்ட மிட்டுள்ள தாம். 
நேற்று சசிகலா கோர்ட்டுக்கு வந்த போது அவருடன் வந்த கார்கள் சில தாக்குதலுக்கு உள்ளாகின. அப்படி தாக்குதல் நடத்தி யவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அது சசிகலா தரப்பின் நாடகம் என தெரிய வந்தது.

மத்திய உளவுத் துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து சசிகலா அடைக்கப் பட்டுள்ள பகுதியில் 10 பெண் போலீஸ் காரர்கள் எப்போதுமே இருக்கும்படி சிறைத் துறை அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings