சசிகலா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? சயனைடு மல்லிகா இடமாற்றம் | Shashikala security threat? Cyanide Mallika swap !

பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச்செய லாளர் சசிகலாவு க்கு அச்சுறுத் தலாக இருந்ததாக கூறப்படும் சயனைடு மல்லிகா பெல்காம் சிறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.


சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு வில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் கைதான பிரபல சீரியல் கில்லர் ‘சயனைடு மல்லிகா' சசிகலாவின் பக்கத்து அறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். அவர் சசிகலா வுடன் பேசுவதற்கு முயற்சித் ததாக கூறப் படுகிறது. 

அவரால் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. 

இதை யடுத்து சசிகலாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சயனைடு மல்லிகாவை பெல்காமில் உள்ள இண்டல்கா சிறைக்கு கர்நாடக சிறைத் துறை மாற்றி யுள்ளது.

இந்தியாவின் முதல் பெண் ‘சீரியல் கில்லரான’ சயனைடு மல்லிகா வின் இயற்பெயர் கெம்பம்மா (52). பெங்களூருவில் உள்ள கலாசி பாளையத்தைச் சேர்ந்தவர். 

தான் நடத்திய சீட்டு கம்பெனி தொழிலில் நஷ்டம் ஏற் பட்டதால் கணவரை விட்டு பிரிந் துள்ளார். மேலும் முதலீட்டாளர் களுக்குப் பயந்து கோயில் களில் தஞ்ச மடைந்து மறைந்து வாழ்ந் துள்ளார்.

ஒரு கட்டத்தில் சாமியார் போல காவி உடை அணிந்து வலம் வந்த மல்லிகா வுக்கு அதிக அளவில் பெண் பக்தர்கள் திரண் டுள்ளனர். 

அதில் பணக்கார பெண்களை குறிவைத்த மல்லிகா அவர்களுடன் நெருக்க மாக பழகி, வீடு வரை சென்று ள்ளார். அங்கு சிறப்பு பூஜை என்ற பெயரில் நீரில் சயனைடு மாத்திரை களைக் கலந்து கொடுத்து பக்தர்களைக் கொலை செய்துள்ளார். 

பின்னர் அந்த வீட்டில் இருந்த நகை, பணம் ஆகிய வற்றையும் கொள்ளை யடித்து விட்டு, தனது இடத்தை வேறு கோயிலுக்கு மாற்றி விடுவார்.

இப்படி சயனைடு கலந்து கொடுத்து பெங்களூரு வில் மட்டும் 6 பெண்களை அவர் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளை யடித்து ள்ளார்.

கடைசியாக பீனியா பகுதியில் மல்லிகா என்ற பெயரில் அறிமுக மாகி ஒரு பெண்ணைக் கொலை செய்து ள்ளார். இதன் பிறகே இவருக்கு ‘சயனைடு மல்லிகா’ என்ற பெயர் வந்தது. 

2006-ல் போலீஸாரிடம் சிக்கிய மல்லிகா வுக்கு 2010-ல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்ப ளித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்த தால் 2012-ல் ஆயுள் தண்டனை யாக குறைக்கப் பட்டது. அதன்பின் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டார்.

ஜெயலலிதாவின் ரசிகை

கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டபோது, சயனைடு மல்லிகா அவரைச் சந்திக்க விரும்பி யுள்ளார். 

தான் ஜெயலலிதா வின் தீவிர ரசிகை என சிறைத்துறை அதிகாரி களிடம் தெரிவித்து, அவரைச் சந்திக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள் ளார். ஆனால் கடைசி வரை ஜெயலலிதா வைச் சந்திக்க முடிய வில்லை.

தற்போது சசிகலா பக்கத்து அறையில் அடைக்கப் பட்டதால், அவரைச் சந்திக்க சயனைடு மல்லிகா விரும்பி யுள்ளார். 

குறிப்பாக சசிகலா உணவு சாப்பிட வரும்போது, அவருக்கு தேவையான உணவை சயனைடு மல்லிகா வாங்கி கொடுத் துள்ளார். மேலும் சசிகலாவுடன் நெருங்கி பழகவும் சந்தர்ப்பம் தேடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா வின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மல்லிகாவை பெல்காம் சிறைக்கு மாற்றி யுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings