எம்.எல்.ஏ.க்களுக்கு ஷாக் கொடுத்த சசிகலா !

கூவத்தூரில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து இரண்டு நாள்கள் சசிகலா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சசிகலாவின் பேச்சு அங்குள்ள வர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி யதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
எம்.எல்.ஏ.க்களுக்கு ஷாக் கொடுத்த சசிகலா !
ஜெயலலிதா வின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட் டுள்ள உட்கட்சிப் பூசலால் அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட வில்லை. 

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா ஆகிய இரண்டு அதிகார மையங் களுக்குப் பின்னால் அ.தி.மு.க.வினர் அணி வகுப்பதால் கட்சி உடையும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. 

ஆட்சி அமைக்க உரிமை கோரி பன்னீர் செல்வமும், சசிகலாவும் ஆளுநரை சந்தித்தப் பிறகும் அவரது தரப்பி லிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. 

தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவ ருக்கும், மத்திய அரசுக்கும் அறிக்கை அனுப்பி விட்டு பதிலுக்காக காத்தி ருக்கிறார் ஆளுநர் வித்யா சாகர் ராவ். 
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இதுவரை 6 எம்.எல்.ஏ.க் களுக்கும், 11 எம்.பி.க்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித் துள்ளனர்.

நாள்தோறும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதால் சசிகலா தரப்பினர் அதிர்ச்சி யடைந் துள்ளனர். 

இதனால் கூவத்தூரில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து இரண்டு நாள்கள் சந்தித்துப் பேசினார். 

பிறகு அங்கு எம்.எல்.ஏ. க்கள் சுதந்திரமாக இருப்பதை வெளியுல கத்துக்கு தெரிவிக்க எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா, பத்திரிகையா ளர்களைச் சந்தித்தார்.

பேட்டியின் போது அங்குள்ள எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை ஆதரிப்பதாக தெரிவி த்தனர். 

இதனால், சசிகலா முகாமில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் இனி அணி மாறவாய்ப் பில்லை என்ற நம்பிக்கை யுடன் இருக்கிறது மன்னார்குடி குடும்பம். 
அதே நேரத்தில், சசிகலா முகாமில் இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் மீது மன்னார்குடி குடும்ப த்துக்கு சந்தேகம் எழுந் துள்ளதாக கூறப் படுகிறது. 

இதுவே, சசிகலா தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் அங்கு சென்று எம்.எல்.ஏ. க்களைத் தனித் தனியாக சந்தித்து பேசி வருவதாக 

ஓ.பன்னீர் செல்வம் தரப்பு குற்றம் சாட்டி உள்ளது. இந்த சந்திப்பின் போது எம்.எல்.ஏ.க்கள் தங்களின் நீண்டநாள் கோரிக்கை களை சசிகலாவிடம் தெரிவித் துள்ளனர். 

குறிப்பாக, மன்னார்குடி குடும்பத்தில் உள்ளவர்களின் செயல் பாடுகளை சூசகமாக அவரிடம் தெரிவித்து ள்ளதாக சொல்கின்றனர். 

அப்போது இனி அப்படி யெல்லாம் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சசிகலா.

அடுத்து, கொங்கு மண்டலத்தில் உள்ள எம்.எல்.ஏ. ஒருவர், அந்த மண்டல அமைச்சர் கட்சி நிர்வாகி களையும், எங்களையும் மதிப்ப தில்லை என்று தெரிவித் துள்ளார். 
'எனக்கும் அந்த தகவல் வந்துள்ளது. தற்போது யார் மீது நடவடிக்கை எடுத்தாலும் அது நமக்குத் தான் ஆபத்தாக முடியும். 

எனவே பொறுமை யாக இருங்கள். ஆட்சிக்கு வந்தப்பிறகு உங்களின் பிரச்னைகளுக் கெல்லாம் முடிவு கட்டுகிறேன்' என்று தெரிவித் துள்ளார் சசிகலா. இதன் பிறகு அமைச்சர் களைச் சந்தித் துள்ளார். 

அவர்களிடம், அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். நமக்குள் சின்ன விரிசல் ஏற்பட்டால் அது கட்சிக்கே பாதகமாக முடிந்து விடும் என்று சொல்லி உள்ளார். 

சசிகலாவின் பேச்சை உன்னிப்பாக அனைவரும் கேட் டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த ஆலோ சனைக்குப் பிறகு அமைச்சரவைப் பட்டியலில் சில மாற்றங்களை செய்ய முடிவு எடுக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த முடிவு, எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு சந்தோஷ மாக இருந்தாலும் ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், தற்போது அமைச் சரவை பட்டியலில் இருக்கும் இரண்டு பேருக்கு கல்தா கொடுக்க சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளதாம். 

அந்த இரண்டு பேரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு தாவ முடிவு செய்து ள்ளனர்.

சசிகலா வால், அவைத் தலைவராக நியமிக்கப் பட்டு இருக்கும் செங்கோட்டை யனின் வளர்ச்சி இரண்டு பேருக்கு பிடிக்க வில்லையாம். 

ஏன் மன்னார்குடி குடும்பத் தினரில் சிலருக்கு கூட இதில் விருப்பம் இல்லையாம். 

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சசிகலாவின் கழுத்துக்கு மேல் தொங்கி கொண்டு இருக்கும் கத்திப் போல இருப்பதால் 

அதையும் கருத்திக் கொண்டு மன்னார்குடி குடும்பம் ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகின்றன.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ஜெயலலிதா வுக்குப் பிறகு யார் என்ற நிலை ஏற்பட்ட போது ஒரு தரப்பினர் மட்டுமே சசிகலா வுக்கு ஆதரவு தெரிவித் தனர். 

அமைச்சர், கட்சிப் பதவிகளில் இருந்தவர்களின் ஆதரவு மட்டுமே சசிகலாவுக்கு முழுமையாக கிடைத்தது. 

பதவிக்காக சசிகலாவை ஆதரித்தவ ர்களுக்கு இடையே போட்டி நிலவு வதால் விரைவில் அது பூதாகர மாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அதோடு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சீட் கொடுக்கப் பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னார்குடி குடும்பத்தினரின் சாய்ஸாக இருந்தது. 

இதனால் அந்த விசுவாசத்தை அவர்கள் பெரிதும் நம்பி இருக்கின்றனர். 

எம்.எல்.ஏ.க்களுக்கு ஷாக் கொடுத்த சசிகலா !
சசிகலா முகாமில் எப்படியாவது பிளவை ஏற்படுத்த பல தரப்பி லிருந்து முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தும் வேலையிலும் சிலர் ஈடுபட் டுள்ளனர். 

இதனால், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா- ஜானகி என்ற இரண்டு அதிகார மையத்தைப் போல தற்போதும் சசிகலா- பன்னீர் செல்வம் ஆகிய இரண்டு அதிகார மையங்கள் உருவெடுத் துள்ளன. 

இதில் யாரை ஆதரிப்பது, மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலருமா என்று ஆலோசித்து வரும் கட்சியினர் முடிவு எடுக்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகி ன்றனர்" என்றார்.

சசிகலாவை ஆதரிக்கும் அமைச்சர் ஒருவர் கூறுகையில், கட்சிக்குள் பூசல் ஏற்படுத்தி அ.தி.மு.க. ஆட்சியை சீர்குலைக்கவும், அமைதிப் பூங்காவாக திகழும் தமிழக த்தை மாற்றவும் சிலர் முயற்சிக்கின்றனர். 

அவர்களின் ஆசை, கனவு, திட்டம் என்றுமே நிறைவேறாது. ஏனெனில் எங்களுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி இருக்கிறது. 
இதனால் ஆளுநர் காலதாமதப் படுத்தாமல் ஜனநாயக ரீதியில் எங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பேசியவர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

சசிகலாவின் உண்மை யான முகம் கட்சியில் உள்ள எல்லோரு க்கும் தெரியும். இதனால் கூவத்தூரி லிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக வெளியே விட்டால் அவர்களின் நிலைப்பாடு தெரியும். 

பத்திரிகைகள் முன்பு சுய விருப்பத்தின் பேரில் இருப்பதாக சொல்லும் எம்.எல்.ஏ.க்களை தனித் தனியாக ஏன், சசிகலா சந்திக்க வேண்டும். 

எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள நம்பிக்கையில் அவருக்கே சந்தேகம் ஏற்பட் டுள்ளது. எங்களை ஆதரிப்ப தாக அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் சொல்லத் தொடங்கி விட்டனர். 
இதற்கு மக்கள், கட்சியினரின் ஆதரவு எங்களுக்கு பெருகி வருவதே காரணம். 

இன்னும் சில நாட்களில் சசிகலா முகாமிலிருக்கும் எம்.எல்.ஏ. க்கள் அவருக்கு எதிராக பேட்டி கொடுப்பதை தமிழக மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள் என்றனர்.
Tags:
Privacy and cookie settings