சசிகலாவுக்கு டிவி, கட்டில்... சுதாகரனுக்கு வழங்க மறுப்பு !

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
சசிகலாவுக்கு டிவி, கட்டில்... சுதாகரனுக்கு வழங்க மறுப்பு !
இதை யடுத்து மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப் பட்டனர்.

அப்போது சசிகலா தரப்பில் முதல் வகுப்பு அறை, இதர வசதிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது. இதனை நீதிபதி அஸ்வத் நாராயணா ஏற்க மறுத்து விட்டார்.

இதையடுத்து கடந்த 16-ம் தேதி சசிகலாவின் வழக்கறி ஞர்கள், கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்திய நாராயண ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

அதில் “சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் களால் பாதிக்கப் பட்டுள் ளனர். மேலும் இருவரும் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமான வரி செலுத்து கின்றனர். 

எனவே இருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதல் வகுப்புக்கு உரிய வசதி களை வழங்க வேண்டும்'' என குறிப்பிடப் பட்டிரு ந்தது.
இதனைப் பரிசீலித்த டிஜிபி சத்திய நாராயண ராவ், பரப்பன அக்ரஹாரா வில் மகளிர் பிளாக்கில் 2-வது அறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, இளவரசி க்கு டிவி, கட்டில், மெத்தை, மின் விசிறி, நாற்காலி, மேஜை, 2 செய்தித் தாள்கள் 

(தமிழ், ஆங்கிலம்) ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்தார். அதே வேளையில் வீட்டு சாப்பாடு, வெளியில் இருந்து மருந்து ஆகிய கோரிக் கைகள் பாதுகாப்பு காரணங் களால் நிராகரி க்கப்பட் டுள்ளன.

ஆண்கள் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப் பட்டுள்ள சுதாகரன் தனக்கு எந்த வசதியும் வேண்டும் என்று கேட்க வில்லை. எனவே அவருக்கு புதிய சலுகையோ, வசதியோ செய்து தரப்பட வில்லை. 

ஏற்கெனவே மூவருக்கும் தலா 2 தட்டுகள், 2 சொம்புகள், தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை, சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப் பட்டுள்ளன.

சயனைடு மல்லிகா சிறை மாற்றம்

இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து பரப்பன சிறையில் அடைக்கப் பட்டிருந்த சயனைடு மல்லிகா பெல்காம் சிறைக்கு மாற்றப் பட்டுள்ளார். 
6-க்கும் மேற்பட்டோரை சயனைடு கொடுத்து கொன்ற இவரால் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஊடகங் களில் செய்தி வெளியானது.

எனவே சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சயனைடு மல்லிகா நேற்று பெல்காம் சிறைக்கு மாற்றப் பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings