சசியின் ஆட்சி தமிழச்சியின் ஆட்சி !

சசிகலாவின் ஆட்சி தமிழச்சியின் ஆட்சி என்று பேசிக்கொண்டு ஒரு கும்பல் கிளம்பி யிருக்கிறது. 
சசியின் ஆட்சி தமிழச்சியின் ஆட்சி !
தமிழ்நாட்டின் முதலமைச் சராக வருபவர் தமிழராக இருந்தால் மட்டும் போதாது, அவர் தமிழ்நாட்டின் மீது விசுவாசம் கொண்டவராக இருக்க வேண்டும். 

தமிழ்த் தேசத்தின் துரோகியாக இருக்கக் கூடாது என்பது கூட இவர்களின் கண்களுக்கு தெரியவில்லை. இனவெறியர்கள் முட்டாள்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

அதிமுகவின் தமிழினத் துரோகம்

இந்தியப் பேரரசிடம் சரணாகதியடைந்து, தமிழகத்திடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் உரிமையையும் தாரைவார்க்க ஒப்புக் கொண்டு தான் சசிகலா முதலமைச்சராக முன்னிறுத்தப் பட்டுள்ளார்.
மோடி அரசுக்கு அதிமுகவின் 50 எம்பிகள் ஆதரவு தேவை. குறிப்பாக, ராஜ்யசபாவில் அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு முக்கியமானதாகும். 

அவ்வாறே, அடுத்து வர இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எம்பிகள் மற்றும் தமிழக சட்டமன்றத்தின் ஆதரவும் பாஜகவுக்கு தேவை. 

இதன் காரணமாகத் தான், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் விவகாரங்களில் மோடி அரசு சசிகலாவுக்கு ஆதரவாக பின் வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் மீது கொஞ்சமாவது அக்கறை இருக்குமானால் குறைந்த பட்சம் காவிரி மேலாண்மை வாரியத்தையாவது 

அமைக்கா விட்டால்  அதிமுக எம்பிக்கள் மோடி அரசுக்கு எதற்காகவும் ஆதரவளிக்க மாட்டார்கள்,
ஜனாதிபதி தேர்தலில் எதிர்த்து வாக்களிப்போம் என்று அறிவிக்க சசிகலா முன் வருவாரா? ஒரு போதும் அப்படி நடக்காது.

அதிமுக, பாஜக இரண்டும் Made for each other வருமான வரி வழக்குகள் மற்றும் நீதிமன்ற நெருக்கடிகளில் சிக்கியுள்ள சசிகலா, மோடி அரசு கேட்கும் ஆதரவுகளை எல்லாம் கொடுத்து விட்டு,

அதற்கு பதிலாக தனக்கு மத்திய அரசின் நெருக்கடிகளை தவிர்க்குமாறு கோரியுள்ளார். இது தான் தற்போது நடக்கும் பேர அரசியல். 

ஓட்டுப் போடும் மக்களுக்கு 200 ரூபாய் லஞ்சம், நிதிமன்றத் தீர்ப்புகளையும் தமக்கு ஆதரவாக மாற்றும் பண வலிமை,

மோடி அரசுக்கு எம்பிகள் ஆதரவு, ஒட்டு மொத்த இந்தியப் பேரரசுக்கு தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்தல் என அவரவருக்கு ஏற்ற விலையை தந்துதான் சசிகலா முதலமைச்சர் ஆகிறார்.
சசிகலா இந்தியப் பேரரசிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை முழுவதுமாக தாரை வார்த்து விட்டார். இப்படிப்பட்ட நபரை தமிழ்த்தேசியத்தின் பெயரால் ஆதரிக்கக் கோருவது என்ன மாதிரியான அரசியல்?

மூடத்தனமான இனவெறி

தமிழன் என்பதற்காகவே ஜனநாயக படுகொலை யாளர்களை ஆதரிக்கக் கோருவது இனவெறி அல்லாமல் வேறு இல்லை. 

அதிலும், இனத்தின் உரிமைகளையே விலை பேசுவோரை, அதே இனத்தின் பெயரால் ஆதரிக்க கோருவது அப்பட்டமான முட்டள்தனம்.
ஹிட்லரை ஆதரித்த ஜெர்மானியர்களுக்கும், ராஜபக்சேவை ஆதரித்த சிங்களர்களுக்கும், சசிகலாவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

இது சொந்த இனைத்தையே அழிக்கும் மூடத்தனமான இனவெறி.
Tags:
Privacy and cookie settings