கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகிய சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் கடைசியாக
கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' என்ற சூப்பர்ர் ஹிட் படத்தையும்,
அதன் பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த 'அசல்' ஆகிய படங்களை தயாரித்தது.
இந்நிலையில் கடந்த 7 வருடங்களாக தயாரிப்பு பணியில் ஈடுபடாமல் இருந்த சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது விஜய், விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ்
ஆகிய மூன்று முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப் படுகிறது. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் 'சேதுபதி' இயக்குனர் அருண்குமார் இயக்க வுள்ள ஒரு படத்திற் காகவும்,
ராகவா லாரன்ஸ் உடன் 'சந்திரமுகி 2' படத்திற் காகவும் இந்நிறு வனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதே போல் இந்நிறுவனம் ஏற்கனவே இளைய தளபதி விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள நிலையில் மிக விரைவில் இது குறித்த அறிவிப் பையும் வெளியிட வுள்ளதாக கூறப்படுகிறது.
Tags: