சரனடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோத னைக்கு செல்ல வேண்டும் என அவர் காரணம் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்ற வாளிகள் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித் துள்ளது.
மூன்று பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபாராதமும் விதிக்கப் பட்டுள்ளது. சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உடனடியாக சரனடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
அந்த மனுவில், தீர்ப்பை ஏற்கிறோம். அஇஅதிமுக கட்சியின் பொதுச்செய லாளராக இருப்பதால் கட்சிப் பணிகள் இருக்கிறது.
அதனை சரி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லை என்பதால் உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். ஆகையால் 4 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும்,
இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு பிற்பகலுக்கு பின் விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.