சி.என்.என் /ஓஆர்சி நடத்திய கருத்துக் கணிப்பில் 53 சதவீதம் பேர், அதிபர் ட்ரம்பின் செயல்பாடுகள் வரவேற்க்கத்தாக இல்லை என்று கூறியுள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும்
அதிபருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சி.என்.என்/ஓஆர்சி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகள் நடத்தி, பதிவு செய்து வருகிறார்கள்.
இது வரையிலும் நடத்தப் பட்டுள்ள அதிபர்களின் முதலாவது கருத்துக் கணிப்புகளில் , ட்ரம்புக்கு கடைசி இடம் கிடைத் துள்ளது.
44 சதவீதம் மக்கள் மட்டுமே அதிபராக அவருடைய செயல்பாடுகள் சரியாக இருக்கின்றன என்று கூறியு ள்ளார்கள்.
43 சதவீதம் அதிபரின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்து ள்ளார்கள்.
அதே சமயத்தில் குடியரசுக் கட்சியினரில் 90 சதவீதம் பேரும் எதிர்க் கட்சியான ஜன நாயகக் கட்சியி னரில் 10 சதவீதம் பேரும் ட்ரம்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித் துள்ளனர்.
முந்தைய அதிபர்களை ஒப்பீடு செய்யும் போது, பராக் ஒபாமா 76% ஆதரவு பெற்று முதலிடத்தைப் பிடித்து ள்ளார். அடுத்துதாக ஜான் எஃப் கென்னடிக்கு 72 %, ட்வைட் ஐசனோவருக்கு 68%, ஜிம்மி கார்ட்டர் 66%,
ரிச்சர்ட் நிக்சன் 59%, பில் க்ளிண்டன் 59% , ஜார்ஜ் டபுள்யூ புஷ் 58% , ஜார்ஜ் ஹெச் டபுள்யூ புஷ் (சீனியர்) 57%. ரொனால்ட் ரீகன் 51% என இடம் பிடித்து ள்ளார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் 44% சதவீத ஆதரவுடன் கடைசியாக இடம் பெற்றிரு க்கிறார். கருத்துக் கணிப்பில் சிரியா அகதிகளை அனுமதி க்கலாமா என்ற கேள்விக்கு 54 சதவீதம் ஆதரவுத் தெரிவித் துள்ளனர்.
30 சதவீத குடியரசுக் கட்சியினரும் ஆதரவு என்பது குறிப்பிடத் தக்கது. மெக்சிகோ பார்டரில் சுவர் கட்டுவதற்கு 60 சதவீதம் பேர் எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர்.
குடியுரிமை, வெளியுறவு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் ட்ரம்பின் செயல் பாட்டுக்கு பாதிக்கும் மேலானோர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
அதே சமயத்தில், 78 சதவீதத்தினர் அதிபர் ட்ரம்ப் இப்படித் தான் இருப்பார் என்று எதிர்ப் பார்த்தோம். ஆச்சரிய ப்படுவதற்கு ஒன்று மில்லை என்றும் கூறியுள்ளனர்.