சட்டசபை செய்தியாளர் மாடத்தில் ஒலிபெருக்கி சத்தம் 'கட்' ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு பலத்த கெடு பிடிகள் உள்ளன.
பத்திரிகை யாளர்கள் செல்போன் களை அவைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டது. புகைப்பட பத்திரிகை யாளர்கள் வழக்கத்திற்கு மாறாக வேறு மாடத்தில் அமரச் செய்யப் பட்டனர்.
இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பாக ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ க்கள், ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நடுவே கடும் வாக்கு வாதம் நடை பெற்றது.
அப்போது திடீரென பத்திரிகை யாளர் மாடத்தில் ஒலிபெருக்கி வசதி கட்டானது. இதனால் அவை உறுப்பி னர்கள் என்ன பேசுகி றார்கள் என்பதை பத்திரிகை யாளர்கள் தெரிந்து கொள்ள முடிய வில்லை.