எந்த ஒரு வழக்கிலும் மிக முக்கிய சாட்சியாகவும், துப்பறிய உதவும் காட்சியாகவும் உதவும் காலத்துக்கு ஏற்ற கருவி... சிசிடிவி! Closed-Circuit Television (CCTV) அல்லது Video surveillance என இதை விளக்கலாம்.
இப்போது பல வீடுகளிலும் சிசிடிவி கேமராக்களை பாதுகாப்பு கருதிப் பொருத்தி வருகின்றனர். குற்றங்களை அறிவதற்கு மட்டுமல்ல... குற்றங்களைக் குறைப்பதற்கு மட்டுமல்ல...
குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் சிசிடிவி நிச்சயம் பயன் தரும். இக்காலகட்டத்தில் நமது வீட்டுக்கு அவசியமான சாதனம் சிசிடிவியே என்றால், அதில் மிகையேதும் இல்லை!
குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் சிசிடிவி நிச்சயம் பயன் தரும். இக்காலகட்டத்தில் நமது வீட்டுக்கு அவசியமான சாதனம் சிசிடிவியே என்றால், அதில் மிகையேதும் இல்லை!
சிசிடிவி வாங்கும் போது மிகப்பெரிய குழப்பம் ஏற்படக்கூடும். எடுத்துக்காட்டாக வாங்கும்போது விற்பனையாளர் எதையும் விளக்கிச் சொல்வது இல்லை.
எண்ணிக்கை, ஒயர் நீளம் பற்றி தான் சொல்வார்கள் தவிர, படத்தின் பதிவு நேரம், காட்சித் தெளிவு பற்றி அவர்களுக்கே விளக்கம் தெரியாது. வெளிநாட்டில் வாங்கினால் சரியாக இன்ஸ்டால் செய்யும் ஆட்கள் குறைவு.
எண்ணிக்கை, ஒயர் நீளம் பற்றி தான் சொல்வார்கள் தவிர, படத்தின் பதிவு நேரம், காட்சித் தெளிவு பற்றி அவர்களுக்கே விளக்கம் தெரியாது. வெளிநாட்டில் வாங்கினால் சரியாக இன்ஸ்டால் செய்யும் ஆட்கள் குறைவு.
பெரும்பாலும் சிசிடிவி விற்பனை, பொருத்துதல், பராமரிப்பு என எல்லாம் சேர்த்தே செய்கின்றனர். இதற்கான தரமான பிராண்டுகள் இன்னும் பெரிய அளவில் விளம்பரப் படுத்தப்பட்டு வெளி வரவில்லை.
ஓரளவுக்கு நாமேதான் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கிறது. வீடியோ போன்கள் தனியாக விற்கப்படுகின்றன. அவற்றில் பேசும் வசதியும் இருக்கின்றன.
வாசலில் காலிங் பெல் அமைப்பு போல வீடியோ போன்கள் பார்க்கும், பேசும் வசதியுடன் உள்ளன. அவை வேறு... சிசிடிவி வேறு. இடத்துக்கும் தேவைக்கும் தக்கவாறு கேமரா சாதனங்களை பொருத்த வேண்டும்.
இதுபோன்ற கண்காணிப்பு கேமராக்கள் இன்று நேற்றல்ல... 1942ம் ஆண்டிலேயே ஜெர்மனியில் வந்து விட்டன. ராக்கெட் லாஞ்ச் நிகழ்வைப் பார்வையிடவே முதன்முதலில் இவை பொருத்தப்பட்டன.
உலகிலேயே முதன்முதலாக பொது இடங்களில் திருட்டுக்கு எதிராக கண்காணிப்புக் கருவிகள் நியூயார்க் நகரில் டைம்ஸ் ஸ்கொயரில் பொருத்தப்பட்டன.
உலகிலேயே முதன்முதலாக பொது இடங்களில் திருட்டுக்கு எதிராக கண்காணிப்புக் கருவிகள் நியூயார்க் நகரில் டைம்ஸ் ஸ்கொயரில் பொருத்தப்பட்டன.
இப்போது மன்ஹாட்டன் மாநகரமே முழுக்க முழுக்க கண்காணிப்பு கேமராக்களுக்கு நடுவில்தான் வாழ்கிறது. அண்மைக்காலமாக கூகுள் மேப் அதைவிட அதிகமாக கண்காணிப்பதாகத் தோன்றுகிறது.
அமெரிக்காவில் பெருநகரங்களில் மத்தியப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்களில் இருந்து தப்பித்து தொடர்ந்து சில கிலோமீட்டர் தூரம் கூட ஒரு தனிமனிதர் செல்ல முடியாது.
பெரும்பாலான காவல் நிலையங்களில் கண்காணிப்பு படங்களை பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். நிஜமாகவே தனிமனித உரிமைப் பிரச்னை இருக்கிறது. இருப்பினும் சில இடங்களில் சில காரணங்களால் தவிர்க்க முடியாது போய் விட்டது.
உலகில் அமைதியும் மனிதமும் தழைக்கும்போது எந்தக் கண்காணிப்புக்கும் அவசியம் இல்லாமல் போய் விடும். இப்போதைக்கு அதை கனவு காண மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. சரி... கண்காணிப்பு கேமராக்கள் திருட்டை குறைக்குமா? குறைக்காதா? இரண்டிலும் உண்மை இருக்கிறது.
நார்த் ஈஸ்டர்ன் கல்லூரியோடு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் சேர்ந்து நடத்திய ஆய்வில், பார்க்கிங் பகுதியில் வைத்த கண்காணிப்பு கேமராக்களால் 50 சதவிகிதம் திருட்டு குறைந்து இருக்கிறது.
அதே நேரம் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்ததால் குற்றம் குறைதல் பற்றிய கணக்கெடுப்பில் மொத்தம் 7 சதவிகிதமே - அதுவும் சில பல காரணங்களால் என்றே ரிசல்ட் கிடைத்தது. கண்காணிப்பு கேமராக்களால் முழுக்க முழுக்க பாதுகாப்பு அளிக்க முடிவது சந்தேகமே.
எனினும், கண்காணிக்க வசதியாக இருக்கும். கேமராக்கள் பரவலாகும்போது குற்றங்கள் குறையவும் கூடும். இனிவரும் காலத்தில் சிசிடிவி கேமராக்களை புறக்கணித்து விட முடியாது!
இங்கிலாந்து போன்ற நாடுகளில் 25 சதவிகித குற்றங்களை சிசிடிவி மூலம் தடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். ட்ராஃபிக் சிக்னல்களில் விபத்துகள், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் உதவுவதோடு, குற்றவாளிகளை அடையாளம் காணவும் முடிகிறது.
பொதுவாக கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் வணிகக் கண்காணிப்பு நோக்கத்துக்கு வைக்கப்படுகின்றன.
கடைகளில் தனித்தனியாக கண்காணிப்பதன் மூலம் சிறுபொருட்களின் திருட்டை தவிர்க்கவும், வேலை செய்பவர்களைக் கண்காணிக்கவும் முடிகிறது. இப்போது மக்கள் கூடும் டூரிஸ்ட் இடங்களில் வைப்பதும் அதிகமாகி இருக்கிறது.
பல பள்ளிகளிலும் வைத்து உள்ளனர். இருப்பினும், ஜிம், பாத்ரூம் அருகில், உடை மாற்றும் இடங்களின் அருகில் வைக்கக் கூடாது. இது ப்ரைவசி சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.
ஏடிஎம் கேமராக்களில் நம் விரல் அசைவுகள் பதிவது நல்லதல்ல. அதன் மூலம் பின் நம்பர் கண்டுபிடிக்க முடியும். இந்தக் காலத்தில் மிகச்சிறிய பேனாவில் கூட கேமரா பொருத்த முடியும் என்பதால்,
கண்காணிப்பைத் தாண்டி ப்ரைவசி பற்றி பேசக்கூட முடியாத நிலையில் இருக்கிறோம். எங்கிருந்தோ, ஏதோதோ கேமரா கண்கள், இதை வாசிக்கும் உங்களையும், எழுதும் என்னையும் கூட கண்காணிக்க வாய்ப்பு உண்டு.
வாங்கும் முன்... கேமராக்களை எங்குப் பொருத்துகிறோம், எதற்காகப் பொருத்துகிறோம் என்பது வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.
* வீடா, அலுவலகமா, வணிக கடைகளா என்று இடத்திற்கு ஏற்றவாறு தேர்ந்து எடுக்க வேண்டும். வீடு, வணிக அலுவலகம் என்றால் வாசலில் புல்லட் கேமரா, மழையில் நனையாத அமைப்பில் வாங்க வேண்டும்.
* மிகப்பெரிய காலி இடங்களுக்கு சர்விலன்ஸ் கேமரா தேவைப்படும். எத்தனை தூரம் வெளிச்சம் வேண்டும் என்பது பொறுத்தே கவரேஜ் வேறுபடும்.
இரவுக் கண்காணிப்பு, வெளிச்சம் இல்லாத இடங்கள் என்று இடங்களுக்கு ஏற்றவாறு பார்க்க வேண்டும். எத்தனை கேமராக்கள் தேவைப்படும் என்று கணக்கிட்டுக் கொள்வதும் நல்லது.
தொழில் நுட்பம்...
* PPS - நொடியில் எடுக்கப்படும் ஃபிரேம்களின் எண்ணிக்கை. கேமரா தொழில்நுட்பத்தில் கவனிக்க வேண்டியது ஃபிரேம் பேர் செகண்ட் (PPS) - அதாவது,
ஒரு நொடியில் 30 ஃபிரேம்கள் எடுத்து பதிவு செய்யும். ஆனால், நாள் முழுக்க பதிவுகள் சேமிக்க வேண்டும். அதுவும் இடைவிடாமல் பதிய வேண்டிய அவசியம் உள்ளது.
நொடிக்கு ஃபிரேம்கள் வந்தால் மணிக்கணக்கில் பதிய நிறைய இடமும், பார்க்கும் நேரமும் அதிகமாகும். ஓரளவுக்கு நன்றாகக் கண்காணிக்க, நொடிக்கு 5 அல்லது 7 ஃபிரேம் போதுமானது.
நொடிக்கு ஒரே ஃப்ரேம் என்றால், ஒருவர் நடப்பது முழுதும் தெரியாது... ஃபிரேம் ஃபிரேமாக இருக்கும். அவர் விட்டு விட்டு - அதாவது, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடக்காமல் ஃபிரேம் ஃபிரேமாக தெரிவார்.
பேய் படங்களில் பேய் இடம் இடமாக தொப் தொப்பென்று மாறும் இல்லையா? அப்படி இருக்கும்! அதே 5 ஃப்ரேம் என்றால், நடப்பது ஓரளவுக்குத் தெரியும். முழு நடையும் பதிவு செய்ய வேண்டும் என்றால் மட்டுமே, 30 ஃபிரேம்கள். அத்தனை அவசியமா என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
* லென்ஸ் கவரேஜ் ஏரியா, ஆங்கிள் - இவையும் முக்கியம். ‘ஃபிரேம் அளவுதான் அதிகமா இருக்கே... ஸ்டில் போட்டு முகம் பார்க்க முடியாதா’ என்று கேட்டால் முடியாது. ஸ்டில் போட்டோ கேமராக்களில் முகம் அடையாளம் காணும் அளவுக்கு வீடியோ கேமராக்களில் முடியாது.
சமீபத்திய ஸ்வாதி கொலை வழக்கில், குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறியதற்கு அதன் லென்ஸ் அமைப்பு காரணம், ஏன் என்றால், அது வெறும் கண்காணிப்பு கேமராவே... அடையாளப்படுத்தும் கேமரா என்றால், அதற்கு ஏற்றவாறு வாங்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக... ஒரு கார்பார்க்கிங்கில். ஒருவரை 50 சதவிகிதம் அடையாளம் காட்டும் அளவுக்கு ஆங்கிள் இருக்க வேண்டும் என்றால்,
அந்த கேமரா இரு கார்களை மட்டுமே நோக்கி இருக்க வேண்டும். 10 கார்கள் பார்க்கும் அளவுக்கு ஆங்கிள் வைத்துவிட்டால், அதில் மனிதர்களை அடையாளப்படுத்த முடியாது.
பெரும்பாலும் மார்க்கெட்டில் கிடைக்கிற கேமராக்கள் 1/3” 3.6mm lens... தோராயமாக 3 மீட்டர் தூரத்துக்கு மேலே முகத்தைத் தெளிவாகக் காட்டாது. 10-15 அடி உயரத்தில் இருக்கும் கேமராவில் ஆசாமியின் முகம் தெளிவாக தெரிய வேண்டும் என்றால்,
ஒரு ஸ்டூல் போட்டு கேமரா அருகில் அவரே முகத்தை காட்டிவிட்டு சென்றால்தான் சாத்தியம்! மேலே உள்ள அமைப்பில் அடையாளம் காணும் வேறுபாட்டை கண்டறியலாம்.
கீழே உள்ள அட்டவணையில் ஆங்கிள் தூரம், அடையாளப்படுத்த முடியும் பார்வை லென்ஸ் அளவுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவைக்கு ஏற்ப தேர்ந்து எடுத்து வாங்கும் முன் கேள்விகள் கேட்பது நல்லது.
ஒளி தூரம்
கேமரா எத்தனை தூரம் வெளிச்சத்தை உள்வாங்கிப் பார்க்கும் என்கிற ஒளி தூரத்தை அளப்பதற்கு lux என்று பெயர். குறைவான ஒளியிலும் நல்ல இமேஜ் கொடுக்கும் கேமரா சிறந்தது.
ரிஷல்யூஷன்
தொடர்ந்து இந்த டெக்னிகல் பகுதியைப் படிப்பவர்களுக்கு ரிஷல்யூஷன் பற்றி நன்றாக தெரியும். அதிக அளவு ரிஷல்யூஷனில் நல்ல படம் கிடைக்கும்.
சிப்
நல்ல கேமராக்கள் நல்ல CCD சிப்களை உபயோகிக்கும். இப்போது 1/4”, 1/3” சிப்கள் கூட அதிக தரத்துடன் படங்களை உருவாக்குகின்றன.
டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (DVR)
அனலாக் முறையில் தனியாக ரிக்கார்ட் செய்யும்போது டேப்பில் பதிகிறார்கள். பெரும்பாலும் ஃபிரேம் அதிகமாக இருந்தால், நிறைய இடத்தையும் நேரத்தையும் எடுத்துக் கொள்ளும்.
தனிப்பட்ட அனலாக் ரிக்கார்டர் இணைக்கும்போது 960 மணி நேரம் வரை ரிக்கார்ட் செய்ய முடியும். இது சற்று விலை அதிகம்.
டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டரில் பல வகைகள் உள்ளன. இதிலும் ஒரு நொடிக்கு எடுக்கப்படும் ஃபிரேம் கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளும். எத்தனை கேமராக்கள் ஒரு டிவிஆரில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்று பார்ப்பதும் முக்கியம்.
எடுத்துக்காட்டாக 4 கேமராக்கள், 30 ஃபிரேம்கள் நொடிக்கு எடுக்கும் போது, ரிஷல்யூஷன் 320*240 வைத்துக் கொண்டு, MPEG முலம் படத்தை கம்ப்ரஸ் செய்யும் பொழுது 25 gb ஹார்ட் டிஸ்க் தேவைப்படலாம்.
இது 80 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். அதற்கு முன் எடுத்தவை அழிந்து விடும். எனவே, எத்தனை நாள், எத்தனை கேமரா, தெளிவு எல்லாம் கணக்கிட்டே ஹார்ட் டிஸ்க் வாங்க வேண்டும்.
HD DVR
இவை உயர் தொழில்நுட்பத்தில் மிகத்தெளிவாக பதிவு செய்யும். அடுத்து கேமரா வகைகள்... எப்படி வாங்கலாம்? எப்படிப் பொருத்தலாம்?
10-15 அடி உயரத்தில் இருக்கும் கேமராவில் ஆசாமியின் முகம் தெளிவாக தெரிய வேண்டும் என்றால், ஒரு ஸ்டூல் போட்டு கேமரா அருகில் அவரே முகத்தை காட்டிவிட்டு சென்றால்தான் சாத்தியம்!
கேமரா எத்தனை தூரம் வெளிச்சத்தை உள்வாங்கிப் பார்க்கும் என்கிற ஒளி தூரத்தை அளப்பதற்கு lux என்று பெயர். குறைவான ஒளியிலும் நல்ல இமேஜ் கொடுக்கும் கேமரா சிறந்தது.