முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்ட சபையில் தி.மு.கவினர் அமலீயில் ஈடுபட்டதால் 2 முறை சட்டசபை ஒத்தி வைக்கபட்டது.
பின்னர் சபை கூடியதும் தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்ற பட்டௌ நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனி சாமிக்கு ஆதர்வாக 122 வாக்குகள் கிடைத்த தால் அவர் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அவைக் காவலர்கள் எங்களை ஷூ காலால் உதைத்து, தாக்கி துன்புறுத்தினர்,. இதில் எனது சட்டை கிழிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேர்மையாக நடைபெற வில்லை.
எனவே இது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க செல்கிறேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அதன் படி மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு சென்று தனது கிழிந்த சட்ட்யுடன் கவர்னரை சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் மெரினா கடற்கரை சென்று காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம் நடத்தி வருகிறது.