தமிழக சட்டப் பேரவையில் கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஜனநாயக படுகொலை நடந்ததாகவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்காமல்
தாங்கள் சபைக் காவலர்கள் மற்றும் போலீசாரால் வெளி யேற்றப்பட்ட தாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ் சாட்டி யிருந்தார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் அவர் டெல்லியில் கடந்த சனியன்று நடந்த சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களிடம் விளக்கி யுள்ளார்.
ஏற்கனவே தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களின் அறிக்கையை பெற்றுள்ள ஜனாதிபதி,
தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தர விட கோருவார் என்று டெல்லி வட்டார ங்களில் இருந்து தகவல் வெளி வந்துள்ளது.
மேலும் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி அவர்களையும் சந்திக்க திட்ட மிட்டுள்ள தாகவும் செய்திகள் வெளி வந்துள்ளது.