ரேசன் கடைக்கு பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் உள்ள மூட்டை களை ஓட்டை போட்டு அரிசி உள்ளிட்ட பொருட்களை திருடும் அதிர்ச்சி யூட்டும் காட்சிகள் கிடைத் துள்ளது.
காஞ்சிபுரத்தில் 3 நாளைக்கு ஒரு முறை அங்குள்ள 1208 ரேசன் கடைகளுக்கு லாரியில் அரிசி பருப்பு சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொது மக்கள் விநியோக த்திற்கு எடுத்து செல்லப் படுகின்றது.
அப்படி எடுத்து செல்லப்படும் லாரியில் இருந்து தினந்தோறும் ஓட்டை போட்டு உணவு பொருட்கள் திருடப்பட்டு வருகின்றது. இதை மறைமுகமாக செல்போனில் படம் எடுத்த காட்சிகள் தற்போது கிடைத் துள்ளது.
இது குறித்து நியாய விலை கடை ஊழியர் சங்க தலைவர் தினேஷ் அவர்கள் கூறுகையில், இது காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடை பெறுகின்றது.
ஒரு மூட்டைக்கு சுமார் 5 கிலோ இது போன்று கொள்ளை அடிக்கப் படுகின்றது, இதனால் தான் பொது மக்களுக்கு எங்களால் சரியான முறையில் பொருட்களை வழங்க முடிவ தில்லை,
உணவு பொருட்களை குறைத்து வழங்கும் நிலை ஏற்படுகின்றது குறிப்பாக சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் . சம்பந்தட்ட துறை அதிகாரி களிடம் புகார் அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்க வில்லை எனத் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக காஞசிபுரம் உணவு வழங்கல் துறை அதிகாரியை தொடர்பு கொள்ளும் போது அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை என்ற தகவலும் வெளியாகி யுள்ளது.
அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பின்பலம் இல்லாமல் இப்படி பட்டவர்த் தனமாக திருட்டுத் தனமாக கொள்கை அடிக்க இயலாது அதனால் தான் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை,
இது உடனடியாக தடுத்து நிறுத்தப் பட்டு சம்பந்தப் பட்டவர்கள் மீடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கொந்தளித் துள்ளனர்.