இந்தியாவிற்காக நாங்கள் இந்தி கற்க வேண்டும். இந்தியாவிற்காக நாங்கள் சல்லிக்கட்டு விளையாடக் கூடாது.
இந்தியாவிற்காக தமிழர் என்ற அடையாளத்தை இழக்க வேண்டும்.
இந்தியாவிற்காக மூன்று தமிழர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.
இந்தியாவிற்காக நாங்கள் அணு உலைகளை சுமக்க வேண்டும்.
இந்தியாவிற்காக நாங்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்.
இந்தியாவிற்காக நாங்கள் கச்சத்தீவு பக்கம் போகக் கூடாது.
இந்தியாவிற்காக நாங்கள் காவிரி நீர் உரிமை கோரக்கூடாது.
இந்தியாவிற்காக நாங்கள் முல்லைப் பெரியாறை விட்டுக் கொடுக்க வேண்டும்.
இந்தியாவிற்காக நெய்வேலி நிலக்கரியை தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும்.
இந்தியாவிற்காக எல்லா அரசு வேலை வாய்ப்புகளையும் விட்டுக் கொடுக்க வேண்டும்.
இதற்கு மேல இந்தியாவிற்காக தமிழர்கள் தியாகம் செய்ய என்ன இருக்கிறது? இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை.
இப்படி நிறைய கேள்விகள் என்னிடம் உண்டு, பதில் தெரிந்தால் தான் நான் ஜனநாயக தேசத்தில் இருப்பதாய் அர்த்தமாகும்.
அர்த்தமற்று வாழ்வதில் மனிதன் எனக் கொள்ள இயலாது. நெடுவாசல் வந்தால் இன்னும் என்னோடு மாணவனும் கேட்பான்.
அதன் பின் உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது. என்று கமல் பொரிந்து தள்ளுகிறார்.